ஸ்ரீ சுப்ரமண்ய ஸப்தகம் --- Sree Subramanya Sapthagam --- (Lyrics in Comments)
Автор: NIRAI ISAI KUDAM
Загружено: 2020-10-05
Просмотров: 51697
Описание:
To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - https://t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn
இறைவனை வழிபட,புகழ் பாட,குணாதிசயங்களை எடுத்துரைக்க,நம்மை வழிமுறை படுத்த இயற்றிய துதிகள் ஸ்தோத்திரங்கள் எனப்படும்.இவற்றுள் பல வகை உண்டு - நாமாவளி, அஷ்டகம், கவசம், தசகம், பதிகம், பஞ்சகம், சக்தம், சப்தகம், சுப்ரபாதம், மங்களம் போன்றவை.
சப்தகம் என்பது ஏழு பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும்.முருகனின் பெருமைகளைப் பாடுவது சுப்ரமணிய சப்தகம்.
ஈசனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால், முருகப்பெருமான் , சிவனின் அம்சமாகவே கருதப்படுகிறார். 'அறுமுகச் சிவன்' என்ற பாம்பன் ஸ்வாமிகளின் கூற்றும், 'அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்' என்ற திருமுருகாற்றுப்படை பாடலும் இதை நமக்கு உணர்த்துகிறது.
முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்
அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகையில் கார்த்திகை
அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்
அசுரரை அழித்தாட்கொண்ட நாள் - ஐப்பசியில் சஷ்டி
வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம்
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும்.'முருகா' என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.
"முருகா எனவுனை ஓதுந்தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவர், வியாதியடைந்து நையார்
ஒருகாலமுந் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்
பொருகாலன் நாடுபுகார் சமராபுரிப் புண்ணியனே"
என்கிறது சிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர்ச் சந்நிதி முறை.
மேலும், நெஞ்சில் ஒருகால் நினைக்கில், இருகாலும் தோன்றும் என்கிறது திருமுருகாற்றுப்படை.
ஆதலால் கண்கண்ட தெய்வமாம் முருகனின் திருவடியைச் சிந்தித்து, இந்த சுப்ரமணிய சப்தகத்தைப் பாடி/கேட்டு, முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
Singer : Akila Natesan
Editor : Bharane Chidambaram
Description : Mani Venkatachalam
Song Lyrics in Comment section due to space constrain.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: