Gandhi Ashram in Tiruchengodu | Soap Making Tamil
Автор: கற்றதும் கேட்டதும் - Katrathum Kettathum
Загружено: 2019-10-25
Просмотров: 5775
Описание:
#GandhiAshram #tiruchengodu #காந்திஆசிரமம் #gandhiji #soapmaking
காந்தி ஆசிரமம் - திருச்செங்கோடு
காந்தி ஆசிரமம் மூதறிஞர் இராஜாஜி அவர்களால் 1925 ம் ஆண்டு தொடங்கப் பெற்றது.காந்தி ஆசிரமம் சுதந்திர போராட்ட பாசறையாகவும், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமுதாய பணிகளையும் செய்து வந்துள்ளது. மேலும் வறட்சி, வேலையின்மை ஆகிய காரணங்களால் கொத்தடிமைகளாக இலங்கைக்கு சென்று கொண்டிருந்த இப்பகுதி மக்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்கும் வகையில் நூற்பு, நெசவு ஆகிய காந்தி நிர்மாண பணிகளையும் மேற்கொண்டு ஏழை, எளிய மக்களின் பசிப்பிணி போக்கும் சமுதாயப்பணி தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
93 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான காந்திய நிறுவனமான இந்த
ஆசிரமத்திற்கு அண்ணல் காந்தியடிகள் 1925 ம் ஆண்டு ஒரு முறையும் 1934ம் ஆண்டு இரண்டாம் முறையும் வருகை புரிந்து இரண்டு நாட்கள் தங்கி இங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, பாராட்டி தனது ஆசிகளை வழங்கியுள்ளார்கள்.
கதர் கிராம கைத்தொழில் ஆணையம் - மும்பை அலுவலகத்தின் தலைமையின் கீழ் மாநில அலுவலகம் KVIC சென்னை அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காந்தி ஆசிரமம் கதர் வேட்டி, துண்டு, பீஸ், போர்வை, மெத்தை, தலையணைகள்,பட்டு புடவைகள், கதர் பாலிவஸ்திரா ரகங்கள், சலவை சோப், குளியல் சோப், ஊதுபத்தி ரகங்கள்,அக்மார்க் தேன் பேக்கிங் மற்றும் இதர கிராம கைத்தொழில் பொருட்களும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: