வேல்மாறல் பாராயணம் எளிதாக கற்றுக்கொள்ள வேண்டுமா? தினமும் பாராயணம் செய்ய ஆசைப்படுகிறீர்களா?
Автор: arul velmurugan அருள் வேல்முருகன் 🦚
Загружено: 2026-01-23
Просмотров: 69
Описание:
வேல்மாறல் எளிதாக என்னுடன் பாராயணம் செய்யுங்கள்!
வாழ்க்கையில் பல அதிரடியான நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தருணங்கள் உங்கள் வாழ்க்கையில் வர வேண்டும் என்றால் உங்கள் கனவுகள் நிறைவேற வேண்டுமென்றால் முருகனின் அருளும் ஆசீர்வாதமும் உங்களுக்கு வேண்டுமென்றால் நிச்சயமாக வேல்மாறல் பாராயணம் செய்யுங்கள்!
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்!
வேலும் மயிலும் சேவலும் துணை (6தடவை சொல்லவும் )
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்கு காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேல் மருங்கில் சேலையும் கட்டிய சீராவும்
கையில் சிவந்த செச்சை மாலையும் சேவல் பாதகையும் தோகையும் வாகையுமே
வேலும் மயிலும் சேவலும் துணை (6தடவை சொல்லவும்
விழிக்குத் துணை திரு மென்பலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
வேலும் மயிலும் சேவலும் துணை (6தடவை சொல்லவும்)
தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் கூர் அணி இட்டு அணுவாகி கிரௌஞ்சம் குலைந்து அரக்கர் நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப் பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே
வேலும் மயிலும் சேவலும் துணை (6தடவை சொல்லவும்)
தடம் கொற்ற வேல் மயிலே இடர்தீரத் தனிவிடில்
நீ வடக்கில் கிரிக்கி அப்புறத்தும் நின் தோகையின் வட்டமிட்டுக் கடலுக்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனகச் சக்ர திடருக்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்தும் திரி குவையே
வேலும் மயிலும் சேவலும் துணை (6தடவை சொல்லவும்)
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
பருத்தமுலை சிறுத்தை இடை வெளுத்தநகை
கருத்தக் குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்கு நிகர் ஆகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கிஎழும் அறத்த நிலை காணும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்த முடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடு நிகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
துதிக்கும் அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கொர்துணை ஆகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிக்கவளை வாகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்துவழி காணும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்ததென முகட்டின் இடை பறக்கஅற விசைத்ததிர ஓடும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அறு கடுத்திரவு பகற்றுனைய தாகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம் நிறைத்து விளையாடும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினைசாடும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
சலத்து வரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
#murugan
#devotional
#velmaral
#tamildevotional
#lordmurugan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: