பனை மரம் - மாறு வேட போட்டி - panai maram - tamil fancy dress competition
Автор: Two little fairies
Загружено: 2024-08-29
Просмотров: 77509
Описание:
பனை மரம் - மாறு வேட போட்டி - panai maram - tamil fancy dress competition
Dressed up like a palm tree.
Dress up show.
@Twolittlefairies
#பனை #பனைமரம்
#palmtrees #fancydress #fancydresscompetition
#tamil
#தமிழ் #மரம்
#பனைமர பாடல்
பனைமரத்தின் பயன்களை எடுத்துரைக்கும் பாடல்: (a song about palm tree)
பனை மரமே! பனை மரமே!
ஏன் வளர்ந்தாய் பனை மரமே!
நான் வளர்ந்த காரணத்தை நண்பர்களே சொல்லுகின்றேன்.
மழைக்கு நல்ல குடை ஆவேன்
மக்களுக்கு மறைப்பு ஆவேன்
வீடு கட்ட மரமாவேன்
மேற்கூரை நான் தருவேன்
கட்ட நல்ல கயிறாவேன் கன்று கட்ட தும்பாவேன்
படுக்க நல்ல பாயாவேன்
பஞ்சனைக்கு நாராவேன்
அடுக்கடுக்காய் பானைகளை அடுக்கி வைக்க உரியாவேன்
பசித்து வந்த மக்களுக்கும் பனம் பழமும் தந்திடுவேன் பக்குவமாய் உரித்து உண்ண பனங்கிழங்கும் நான் தருவேன்.
எனை விரும்பும் பேர்களுக்கு பனை வெல்லமும் நான் தருவேன்
பத்தியமாய் பனங்கற்கண்டும் நான் தருவேன்
புடைக்க நல்ல முறமாவேன்
புட்டுக் கூடை நான் தருவேன்
சித்திரை கோடையிலே சிறந்த நுங்கை நான் தருவேன்
எத்திசையில் உள்ளவர்க்கும் இயல் உதவி செய்திடுவேன்.
தூரத்து தேசத்துக்கு தூதோலை நான் ஆவேன்.
காலமெல்லாம் பருவநிலை காப்பதற்கு நின்றிருப்பேன். காது வளர் பாட்டிக்கு காதோலை நான் ஆவேன். இதமாக நீ அருந்த பதநீரும் நான் அளிப்பேன்.
பட்டாளி களைப்பு போக்க பனங்கள்ளும் நான் அளிப்பேன்.
எழுத்தோலை சுவடி செய்ய குருத்தோலை நான் ஆவேன்.
பல்லுயிர் வாழ் இடமாவேன்
பறவைக்கும் இடம் தருவேன் சூழல் வளம் காத்த நானே, சூளையிலும் விறகானேன்.
ஏற்றமிகு மண் காக்க ஏரிக்கரை மரமானேன்
என் போலே நீங்களெல்லாம் இயல் உதவி செய்வீரேல்
நயமுடனே நாமெல்லாம் நன்றாக வாழ்ந்திடலாம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: