பொங்கல் சிறப்பு பாடல் | வாராஹி வரலாறு | Varahi Varalaru | Amman Song | Annai Cinema Musics
Автор: Annai Cinema Musics
Загружено: 2026-01-14
Просмотров: 1188
Описание:
Song : Varahi Varalaru
Singer : Abhishek Raju
Lyrics : K V Sridharan
Music : Kanmaniraja
Producer : Anitha Vijay Anand
Producer : Ravi Mdhura Pantula
Coordination : Ravi Pantula
Production : Annai Cinema Musics
#annaicinemamusics #varahi #varahiamman #varahidevi #ammansongstamil #annaivarahi
பாடல் : வாராஹி வரலாறு
குரலிசை : அபிஷேக் ராஜு
கவியாக்கம் : K V ஸ்ரீதரன்
இசை : கண்மணிராஜா
தயாரிப்பாளர் : அனிதா விஜய் ஆனந்த்
தயாரிப்பாளர் : ரவி மதுர பந்துலு
ஒருங்கிணைப்பாளர் : ரவி பந்துலு
தயாரிப்பு : அன்னை சினிமா மியூசிக்ஸ்
வாராஹி வரலாறு
அதை கேட்டாலே பல நூறு
அன்னை வாராஹி வரலாறு
அதை கேட்டாலே பல நூறு
ஆத்தாடி உடல் சிலிர்க்கும்
இந்த பூலோகம் மதி மயங்கும்
அவ கருணைவிழி பார்வையினால்
காரியம் கை கூடும்
அவ கதைகேட்டு முடிக்கையிலே
கனவுகள் நிறைவேறும்
மிருக பலமுடன்
தேவ குணமுடன்
ஊழி முடிவிலே
இந்த உலகினை மீட்க வந்தாள்
லலிதை தேவியின்
தந்தை ஆகியே
உலகை காக்கவே
கை உலக்கை ஏந்தி வந்தாள்
ஏழு அன்னையரில்
ஏற்றமுள்ள வராஹி
கோரைப் பல்லுடன்
பன்றி உரு தானாகி
எருது குதிரையுடன்
சிம்மரதம் மீதேறி
எட்டு திசையிலும்
வெற்றி தரும் வராஹி
கதை எடுத்தாள்
தோள் தினவெடுத்தாள்
சூழ்விசித்திரன் கதை முடித்தாள்
பகை சங்கரித்து வரமளித்தாள்
சக்தி பீடமே
ஸ்ரீ சக்ர பீடமே
அக்னி வீதியில்
தீச் சுடராய் ஜொலிக்க வந்தாள்
ரத்ன மண்டபம்
கிரி சக்ர தேரினில்
கோட்டை குற்றமே
கை கலப்பை ஏந்தி நின்றாள்
எழும்பு நரம்பிலே வாழுகிற வாராஹி
எழுந்த நொடியிலே சூரன் சுக்குநூறாக
எலுமிச்சைக்கனி மாலையிட்ட வராஹி
உதிரச்சேற்றிலே உக்கிரமா நீராடி
வாள் எடுத்தாள் அரிவாள் எடுத்தாள்
போர் ரத்த பீஜ்யன் நரம்பறுத்தாள்
தாய் வார்த்தாளி வரம் கொடுத்தாள்
கரங்கள் ஆறுடன்
தண்டம் வாளுடன்
சக்தி சேனையாய்
சுப பஞ்சமி களம் புகுந்தாள்
கிரிபதா தேவி
உன்மத்த பைரவி
பரிவாரமாக்கியே
கொடும்பகை வென்றெடுத்தாள்
தண்டம் வாளுடன் முண்டமணி தோளோட
பண்டன் மார்பிலே முத்தளையின் சூலேற
அண்டம் ஏழுமே ஆர்ப்பரித்து கொண்டாட
கண்ட வானவர் மெய்சிலிர்த்து நின்றாட
கரு நிறத்தாள்
பன்றி திரு முகத்தாள்
குருகுல்லா என அழைத்தாள்
திரு அருள்தர மனையிருப்பாள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: