முழுமையான அமைதியும் சந்தோஷமும் தரும் ஆன்மீகம் - மகளிர் தின சிறப்புரை 2021 - திருமதி. லதா சுந்தரம்
Автор: MahaPrasadam
Загружено: 2021-03-08
Просмотров: 230
Описание:
“முழுமையான அமைதியும் சந்தோஷமும் தரும் ஆன்மீகம்”
மகளிர் தின சிறப்புரை
வழங்குபவர்
திருமதி. லதா சுந்தரம்
பிரஸாதம் இணையவழி தொலைக்காட்சி நேயர்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!
திருமதி. லதா சுந்தரம் அவர்கள் அறம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர். இவர் நமது நாட்டின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து கடந்த 2016 ஆம் ஆண்டின் மகளிருக்கான சாதனையாளர் விருது பெற்றவர்.
தேசிய அளவிலான கைப்பந்து விளையாட்டு வீரரான இவர் தற்போது இந்திய இரயில்வே துறையில் பணிபுரிகின்றார். இவர் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சியும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். தற்போதும் இவர் தமது அறக்கட்டளையின் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல வகைகளிலும் சமூக சேவையாற்றி வருகின்றார்.
நல்ல சூழ்நிலையில் சந்தோஷமாக வாழ்கின்ற குழந்தைகளால் தான் நாளை சிறந்த குடிமக்களாக வாழ முடியும் என்பதையும், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான வாழ்க்கை வாழ உரிமை உள்ளது என்பதையும், ஒவ்வொரு குழந்தைகளும் புரிந்த கொள்ளும் வகையில் அவர்களுக்கு எடுத்து சொல்லி குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறக்கவும் குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் வருடம் 365 நாட்களும் ஒய்வு இல்லாமல் உழைக்கும் சமூக சேவகி திருமதி லதா சுந்தரம் அவர்கள் பிரஸாதம் இணையவழி தொலைக்காட்சி நேயர்களுக்காக வழங்கிய சிறப்பு மகளிர் தின உரையையும், ஆன்மீகம் எவ்வாறு நம்மை மேன்படுத்தும் என்பதையும் தன் வாழ்வியல் முறையோடு ஒப்பிட்டு வழங்கும் சிறப்புரையையும் காண்போம் வாருங்கள்...
#மார்ச்8 #மகளிர் #தினம் #பெண் #மகளிர்தினம் #வாழ்த்துகள் #மகளிர்தினவாழ்த்துகள் #அறம்அறக்கட்டளை #குழந்தை #சமூகசேவை #சமூகம் #சேவை
#பிரஸாதம் #வெப் #டிவி #பிரஸாதம்வெப்டிவி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: