பொங்கு சனீஸ்வரர்| திருக்கோயில்| திருக்கொள்ளிக்காடு|| Pongu Saneeswarar Temple|| Thirukollikadu|| சனி
Автор: AalayaOm
Загружено: 2022-11-10
Просмотров: 30254
Описание:
அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் நாம் தரிசிக்க இருப்பது தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சனி பகவானின் பரிகார தலங்களில் ஒன்றான பொங்கு சனீஸ்வரர் வீற்றிருக்கும் அருள்மிகு மிருதுபாத நாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோயில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருத்தலம், திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு என்ற பகுதியில் அமைந்துள்ளது. முதலில் இத்தலத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம். சனி பகவான் தன் சாபம் நீங்குவதற்காக, இங்குள்ள சிவபெருமானை வேண்டி தவமிருந்து அவரின் அருள் பெற்றார். மேலும், இங்கு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம், நீண்ட ஆயுள், குபேர சம்பத்து அளிக்கும் வரத்தை சிவபெருமானிடம் பெற்றார். இதன் காரணமாக, இங்கு சனி பகவான், தனி சன்னதியில், கையில் கலப்பையுடன் காட்சி அளித்து, பொங்கு சனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தை சனி பரிகார தலம் எனபதை விட சனி பகவானின் அனுகிரக தலம் என்பதே பொருத்தமானது. இந்த சிவாலயத்தில் சற்று வித்தியாசமாக, லட்சுமி சன்னதி இருக்கும் இடத்தில் சனி பகவான் சன்னதி அமைந்துள்ளது. அவருக்கு அருகில் மஹாலக்ஷ்மி சன்னதியும் அமைந்துள்ளது. இந்த விசேஷமான அமைப்பை வேறெங்கும் காணமுடியாது. இங்கு சிவன் மேற்கு நோக்கி அருள் புரிவதால், பல மடங்கு நற்பலன்களை அளிக்கும் பரிகார தலமாக திகழ்கிறது. அக்னி பகவான், தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க இங்கு தவமிருந்து, சிவனை வழிபட்டதால் மூலவருக்கு “அக்னீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலம், திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
பிரார்த்தனை சிறப்பு: இத்தலத்தில் சனி பகவான், அனுகிரக மூர்த்தியாக பொங்கு சனீஸ்வரராக இருப்பது மிக சிறப்பு.
கோச்சாரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற காலகட்டங்களில் இருப்பவர்கள் மற்றும் ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமையன்று அக்னி தீர்த்தத்தில் நீராடி, அக்னீஸ்வரர், அம்பாள் மற்றும் பொங்கு சனீஸ்வரை பிரார்த்தித்து வழிபடுகிறார்கள். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு சனியால் ஏற்படும் எல்லாவித தோஷங்களும் நீங்கி, குபேர சம்பத்து, லக்ஷ்மி கடாட்சம், ஆயுள் பலம், ஆரோக்கியம், புகழ் ஆகிய நற்பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பொங்கு சனி நடப்பவர்கள், இங்கு வழிப்பட்டால் சனி பகவானால் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
ஆலய நடை திறப்பு நேரம்: காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை. சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
சென்னையிலிருந்து சுமார் 330 கி.மீ தொலைவில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு என்ற பகுதியில் கோயில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூரிலிருந்து கோயிலுக்கு செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: