#துருவ
Автор: News star Headlines
Загружено: 2025-03-01
Просмотров: 49
Описание:
துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் பற்றிய அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்....
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச் 15ம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்- யின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு பிராட்வே சினிமாஸ்- இல் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இந்த நிகழ்ச்சியில் பதினாறு பாடகர்கள் பாட உள்ளதாக தெரிவித்தார். தொழில்நுட்பங்களை கூடுதலாக சேர்க்க உள்ளதாக தெரிவித்த அவர் இசை பாடல்களின் clarity க்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாடல்கள் மட்டும் இன்றி பல்வேறு படத்தின் பின்னணி இசைகளையும் லைவாக நிகழ்த்திக் காட்ட இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதில்லை எனவும் அதே சமயம் இந்த நிகழ்ச்சியை தவிர்த்தும் தனக்கு AI யில் உடன்பாடும் இல்லை என தெரிவித்த AI தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்த மாட்டேன் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் பேச்சுகளே இருக்காது ல இசையும் பாடல்களும் தான் இருக்கும் என தெரிவித்தார். ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையே அதிகபட்சமாகவே நான்கு நொடிகள் தான் இடைவெளி இருக்கும் எனவும் அடுத்தடுத்த பாடல்கள் தொடர்ந்து இடம்பெறும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எனக்கு மிக அருகிலேயே இருப்பார்கள் எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஸ்பீக்கர்கள் அதன் வரிசைகள் மூலம் முதல் வரிசையில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு இந்த இசையை உணர்கிறார்களோ அந்த அளவிற்கு கடைசி வரிசையில் இருப்பவர்களும் உணர்வார்கள் என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி இளம் வயதினர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கொண்டாடும் வகையில் அமையும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தனது மகனும் இசையமைக்க உள்ளதாக கூறினார்.
மேலும் ஏப்ரல் மாதம் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார். பழைய படங்களை ரீரிலீஸ் செய்வது தற்பொழுது ட்ரெண்ட் ஆகி வருவதாகவும் அது அந்த படங்களில் உள்ள கதை இசை பாடல்களை பொறுத்து அமைவதாகவுன் அதனை திரையில் பார்க்கும் அனுபவமே வேறு என கூறினார்.
செய்தியாளர் சந்திப்பிற்கு இடையே ஹாரிஸ் ஜெயராஜன் மகன் பாடல் பாடி அசத்தினார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 999 ரூபாயில் இருந்து துவங்க உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் தெரிவித்துள்ளனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: