மலை நாட்டு திவ்ய தேசம்//பஞ்ச பாண்டவர்கள் கட்டிய கோவில்
Автор: Nachathra Channel
Загружено: 2023-09-11
Просмотров: 1123
Описание:
Thanks for watching this video keep support contact us [email protected]
1:திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது
2:திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை (ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு வைணவக்கோயில். இது வைணவர்களுக்கு முக்கியமான வைணவத்திருத்தலங்களான 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். கடவுள் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள
3:திருநாவாயா கோயில் (முழு திருநாவாய நவாமுகுந்தா கோயில் ) என்பது இந்தியாவின் மத்திய கேரளாவின் திருநாவாயவில் உள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் , இது பாரதப்புழாவின் (பொன்னானி ஆற்றின்) வடக்குக் கரையில் நவாமுகுந்தனுக்கு ( நாராயண-விஷ்ணு ) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
4: திருச்செங்குன்றுர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பட்ட தலம் எனக் கருதப்படுகிறது.
5:திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.
6: திருவாறன்விளை
தலபுராணம்: திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது
7: திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீவல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது.
8: திருமூழிக்குளம் ஸ்ரீ லட்சுமணப்பெருமாள் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது . ஸ்ரீ வைஷ்ணவ ஆழ்வார்கள் , குறிப்பாக நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்கள் பாடிய பழங்கால தமிழ் வேதத்தின் ( நாலாயிர திவ்ய பிரபந்தம் ) சில பாடல்களில் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது . மலைநாட்டு (கேரளா/சேரா) திவ்ய தேசங்களில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று.
9: திருவான்வந்தூர் மகாவிஷ்ணு கோயில் என்பது விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும் , இது தென்னிந்தியாவின் கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள திருவான்வந்தூரில் அமைந்துள்ளது . கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில், 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை ஆழ்வார் மகான்களின் ஆரம்பகால இடைக்கால தமிழ் நியதியான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது
10;பட்டாம்பியை அடுத்துள்ள ஷோரனூருக்கும் கல்லிக்கோட்டைக்கும் இடையே இத்தலம் உள்ளது. ஷோரனூர் வழியாக குருவாயூருக்குச் செல்லும்போது 10 மைல்கள் சுற்றிச் செல்லும்போதும் இந்த ஸ்தலத்தை அடையலாம். ரயிலில் பயணிக்கும் போது, ஷோரனூர் - கல்லிக்கோட்டை வழித்தடத்தில் காணப்படும் பட்டாம்பி ரயில் நிலையத்தில் இறங்கி, 2 மைல் பயணித்த பின், இந்த ஸ்தலத்தை அடையலாம். பட்டாம்பியில் தங்கும் வசதி உள்ளது.
இந்த ஸ்தலம் "அஞ்சுமூர்த்தி கோயில்" என்று அழைக்கப்படுகிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: