வாழ்க்கையில் வரும் இடறுகள் நீங்க | சதுரங்க பந்தம் | Sadhuranga Bhandam | with lyrics | 27 times
Автор: Kavitha Kameswaran
Загружено: 2022-10-05
Просмотров: 322330
Описание:
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய
சதுரங்க பந்தம்
LYRICS:
வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே
Meaning:
ஒளிநிறைந்த ஆதியந்தமற்ற மயிலில் ஏறும் அழகுபொருந்திய பெரிய செவ்வேள் பரமனாகும் வேலவனே !!
தூய்மையே வடிவான சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்டவனும், சமாதி நிலையில் எப்பொழுதும் இருக்கும் யோகியர்க்கெல்லாம் தலைவனுமான முருக பெருமானே !!
"ஆட்க்கொண்டு அருள்" எனத் துதிக்கும் நாக்கு உடைய அன்பர்களின் தூய அன்புத்திறத்தைத் துய்க்கும் எங்கள் உத்தமனுக்கே அடிமைப்பட்டு வாழ்வதுதான் மிகவும் பெருமை உடையது என ஆகமம் கூறும்
Meaning courtesy:
Pamban Swamigal - Sadhuranga Bhandam Video - by Srinivasan Janakiraman.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: