Guruvayurappan Temple| Sriperumpudhur| ஸ்ரீபெரும்புதூர்| குருவாயூரப்பன் கோயில்|
Автор: AalayaOm
Загружено: 2023-09-01
Просмотров: 7801
Описание:
அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில், நாம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள குருவாயூரப்பன் கோயிலை பற்றி பார்ப்போம். சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் கேரளத்தில் உள்ள கோயிலை போலவே கட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கு அனைத்து பூஜைகள், வழிபாடு முறைகள் கேரளத்தை பின்பற்றி, அதை போலவே நடைபெறுகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் க்ஷேத்ரபாஸ்னா உள்ளது. சாலையின் வலது பக்கத்தில் அமைந்துள்ள நுழைவாயிலை கடந்து சிறிது தூரம் சென்றதும், இடதுபுறம் குருவாயூரப்பன் கோயிலுக்கு செல்லும் பாதை உள்ளது. பாதையை கடந்து சென்றதும், சுற்றிலும் வயல்வெளி நிறைந்த அமைதியான சூழலில் குருவாயூரப்பன் கோயிலை அடையலாம். போதிய அளவு வாகனங்கள் நிறுத்த இடம் உள்ளது. ஆலய அமைப்பு கேரளத்தில் உள்ள குருவாயூர் கோயிலை நமக்கு நினைவு படுத்துகிறது. கிழக்கு நோக்கிய ஆலய நுழைவாயிலை கடந்ததும் இடதுபுறம் பெரிய மண்டபம் அமைந்துள்ளது. நுழைவாயிலுக்கு நேரெதிரே குருவாயூரப்பன் கருவறை மண்டபம் மிக விசாலமாக கட்டப்பட்டுள்ளது. கருவறை மண்டபம் முன் கொடிமரம், பலிபீடம் மற்றும் நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறை மண்டபமும் விசாலமாக உள்ளது.
கருவறை மண்டபத்தில் தனி சன்னதியில், குருவாயூரப்பன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணர் புண் முறுவலோடு, கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். தனது நான்கு கரங்களில் சங்கு, சுதர்சன சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தி கேரளத்தில் உள்ள குருவாயூரப்பனை போலவே பரவசத்துடன் காட்சி தருகிறார். இந்த காட்சியை காணும் பக்தர்கள் குருவாயூர் சென்ற புண்ணியத்தை பெற்றதாக மகிழ்ச்சி அடைகிறார்கள். கருவறை மண்டபத்தின் இறுதியில் இடதுபுறம் கணபதி சன்னதி மற்றும் வலதுபுறம் மூகாம்பிகை சன்னதியும் உள்ளன. இந்த மூகாம்பிகை உருவம் கொல்லூர் மூகாம்பிகையை போலவே உள்ளது. எனவே கொல்லூர் செல்ல முடியாத பக்தர்கள், இந்த அம்மனை வேண்டி கொள்ளலாம்.
பிரார்த்தனை சிறப்பு: குழந்தை இல்லாத தம்பதியருக்கு, இந்த கோயில் சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது. இங்கு தம்பதியர்கள் வந்து குருவாயூரப்பனை வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், பிறந்த குழந்தைக்கு முதல் முறை சோறு ஊட்டுதல் இங்கு மிக விசேஷம். இப்படி செய்வதால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல உணவு கிடைக்கும். பக்தர்கள் நீண்ட ஆயுள் பெறவும் வேண்டி கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், துலாபாரம் செய்வதன் மூலம் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். குருவாயூர் போலவே இங்கு அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. பூஜைகள் மற்றும் அதற்கான கட்டணத்தை இங்கே காணலாம்.
ஆலய நடை திறப்பு நேரம்: காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி
ஆலய தொடர்பு விவரங்கள்:
திரு. ராமு அவர்கள்
தொலைபேசி எண்: 93809 14999
இத்திருக்கோயில், சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளன.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: