*Shen3news*குடிநீர் வழங்க கோரி அப்பகுதிகிராமமக்கள் காலி குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை
Автор: Shen3 News
Загружено: 2023-11-02
Просмотров: 20
Описание:
கோவில்பட்டி அருகே உள்ள இரணசூர் நாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க கோரி அப்பகுதி கிராம மக்கள் காலி குடங்களுடன் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையபுரம் உள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சி ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தில் 80 சதவீதம் மக்கள் பட்டியல் இன அருந்ததியர் மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த 2 மாத காலமாக முறையாக பஞ்சாயத்து நிர்வாகம் தங்களுக்கு குடிநீர் தர வழங்கவில்லை இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி பின்பு குடிநீர் வழங்கினர்.
தற்போது கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் திறந்து விடுவதில்லை. இது சம்பந்தமாக சுரைக்காய்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று முறையிட்டால் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறி எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி பாய் தலகாணி உடன் படுத்து உறங்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர் ...
போராட்டம் நடத்திய கிராம மக்கள் இடம் எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் கண்ணா , எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை அழைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: