அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா - Lyrical Video |
Автор: Trendani - Hindu Tamil Devotional
Загружено: 2024-12-19
Просмотров: 152830
Описание:
#alaikkattuma
#devotionalsongs
Here is the Lyrical Video Song of "Alaikkattuma Thaye Alaikkattuma Akka Thangai" Sung by Madurai Sakthikarthick, & Produced by Madurai Sakthikarthick.
Track UPC Code : 7316216069223
Song Credits: -
Song : Alaikkattuma Thaye Alaikkattuma Akka Thangai
Singer : Madurai Sakthikarthick
Composer: Saravanan ganesh
Mixer : Derick
Lyrics : Madurai Sakthikarthick
Producer: Madurai Sakthikarthick
Listen to “ Alaikkattuma Thaye Alaikkattuma Akka Thangai " song on your favorite streaming platforms :-
https://maduraisakthikarthick.fanlink...
Lyrics :
அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா
அவ அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா
அம்மா அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
மஞ்ச நல்ல சேலை காரி அழைக்கட்டுமா
இந்த மகிழம்பூ மாலைக்காரி அழைக்கட்டுமா
அம்மா மக்களையும் காப்பவளே அழைக்கட்டுமா
தாயே மடப்புரம் காளி அவ அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
கோலவிழி கொண்டவளே அழைக்கட்டுமா
அம்மா கொடுஞ்சுரமானவளே அழைக்கட்டுமா
அவ கோவத்திலே கெட்டிக்காரி அழைக்கட்டுமா
தாயே கொல்லங்குடி காளி அவ அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
சடையும் அழகி அவ அழைக்கட்டுமா
அவ சாந்த நல்ல முகத்தழகி அழைக்கட்டுமா
சஞ்சலத்த தீர்ப்பவளே அழைக்கட்டுமா
எங்க சமயபுரம் மாரியம்மா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
வைகை வடகரையாம் அழைக்கட்டுமா
நம்ம வாட்டமெல்லாம் தீர்ப்பவளாம் அழைக்கட்டுமா
அவ வண்ண மயில் அழகி அழைக்கட்டுமா
தாயே வண்டியூரு மாரியம்மா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
தாயைப் போல காப்பவளே அழைக்கட்டுமா
அம்மா தனிக்கோவில் கொண்டவளே அழைக்கட்டுமா
அங்க தகுந்த வரம் கொடுப்பா அழைக்கட்டுமா
நம்ம தாயமங்கலம் முத்துமாரி அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
ஆலமரத்துக்காரி அழைக்கட்டுமா
அம்மா அடிமரத்து கொப்புக்காரி அழைக்கட்டுமா
நம்மள ஆதரிக்கும் தெய்வம் அவ அழைக்கட்டுமா
எங்க ஆனைக்குளம் முத்துமாரி அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அஞ்சன மைக்காரி அழைக்கட்டுமா
அவ அரும்பு நல்ல பல்லுக்காரி அழைக்கட்டுமா
நம்ம அச்சமெல்லாம் தீர்ப்பவளே அழைக்கட்டுமா
அந்த கருந்தமலே ராக்காயி அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
மாமரமா சோலைக்காரி அழைக்கட்டுமா
அவ மந்திகளின் கூட்டக்காரி அழைக்கட்டுமா
அங்க மலைமேலே வாழ்பவளே அழைக்கட்டுமா
எங்க மங்கை அவ ராக்காயி அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
ஏய் பச்சை நல்ல பட்டுக்காரி அழைக்கட்டுமா
அவ பவுனு நகை கழுத்துக்காரி அழைக்கட்டுமா
என் பாசத்திலே கெட்டிக்காரி அழைக்கட்டுமா
அந்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
எருமை தலை அழகி அழைக்கட்டுமா
அந்த எமனையுமே வென்றவளே அழைக்கட்டுமா
இந்த புவி ஆள வந்தவளே அழைக்கட்டுமா
அந்த புளியங்குளம் துர்க்கையம்மா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
கண்டாங்கி சேலைக்காரி அழைக்கட்டுமா
நம்மள காப்பதிலே கெட்டிக்காரி அழைக்கட்டுமா
அவ காலு சிலம்புக்காரி அழைக்கட்டுமா
அந்த கட்டழகி பேச்சி ஆத்தா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
பூமியெல்லாம் ஆள்பவளே அழைக்கட்டுமா
இந்த பூந்தோட்டம் ஆள்பவளே அழைக்கட்டுமா
தாயே பத்தினியே பெற்றளே அழைக்கட்டுமா
எங்க படித்துறை பேச்சி ஆத்தா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அம்மா அன்று பிறந்தவளே அழைக்கட்டுமா
தாயே அன்றே அழிந்தவளே அழைக்கட்டுமா
அங்க பாலு வடியும் முகம் அழைக்கட்டுமா
அந்த பரமக்குடி முத்தாலம்மா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
கொஞ்சும் சலங்கைகாரி அழைக்கட்டுமா
அவ குலவையிலே கெட்டிக்காரி அழைக்கட்டுமா
தாயே கமல முழியழகி அழைக்கட்டுமா
அந்த கடம்பூரு முத்தாலம்மா அழைக்கட்டுமா
தாயே அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
அழைக்கட்டுமா அழைக்கட்டுமா
அக்கா தங்கை ஏழு பேர அழைக்கட்டுமா
--------------------------------------------------------------------------------------------------
In Association with Trendani Music
YouTube: / @trendanimusicindia
Facebook: / trendanimusicindia
Twitter: / trendanimusic
Web:https://www.trendanimusic.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: