பாபம் தீர்க்கும் | ஆதிசங்கரர் அருளிய த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்
Автор: Naam Hindu நாம் ஹிந்து
Загружено: 2023-05-03
Просмотров: 221
Описание:
சங்கரர் அருளிய ஸ்தோத்ரம் துதிக்கிறது.
ஸௌராஷ்ட்ர தேசே வஸுதா4வகாசே ஜ்யோதிர் மயம் சந்த3ரகலாவதம்ஸம் |ப4க்திப்ரதா3நாய க்ருதாவதாரம் தம் ஸோமநாத2ம் சரணம் ப்ரபத்3யே ||
உலகத்தில் உகந்த இடமான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிமயமாக, பிறைச்சந்திரனை முடியில் கொண்டு, ஜனங்களுக்கு பக்தியை ஊட்டுவதற்கே அவதரித்த ஸ்ரீஸோமநாதரை சரணம் அடைகிறேன்.
ஸ்ரீசைலச்ருங்கே3 விவித4ப்ரஸங்கே3 சேஷாத்3ரிச்ருங்கே3பி ஸதா3வஸந்தம்தமர்ஜுநம் மல்லிகபூர்வமேநம் நமாமி ஸம்ஸாரஸமுத்3ரஸேதும் ||
பலவாறு நற்சேர்கை பெற்ற ஸ்ரீசைலமலையுச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்பொழுதும் வசிக்கிறவரும், பிறப்பிறப்பாகிற கடலுக்குக் கரையாக இருப்பவருமான மல்லிகார்ஜுனர் என்று புகழ் பெற்றவரை வணங்குகிறேன்.அவந்திகாயாம் விஹிதாமதாரம்
முக்திப்ரதா3நாய ச ஸஜ்ஜநா நாம்: |அகாலம்ருத்யோ: பரிரக்ஷணார்த2ம் வந்தே3 மஹாகாலமஹம் ஸுரேசம் ||
வந்தி என்னும் நன்மக்களுக்கு முக்தியைக் கொடுப்பதற்கும், காலம் வராதபோதே ஏற்படும் மரணத்திலிருந்து காப்பதற்கும் உஜ்ஜயிநியில் அவதரித்தவரும், தேவர்கள் தலைவனான மஹாகாலேச்வரரை வணங்குகிறேன்.
காவேரிகா நர்மத3யோ: பவித்ரே ஸமாக3மே ஸஜ்ஜந்தாரணாய |ஸதை3வ மாந்தா4த்ருபுரே வஸந்தம் ஓங்காரமீசம் சிவமேகமீடே3 ||
காவேரீ நர்மதை இவைகளின் சேர்க்கையில் தூய்மையான மாந்தாத்ருபுரம் என்னுமிடத்தில் நல்லவர்களைக் கரையேற்ற வஸிப்பவரான ஓங்காரேச்வரர் எனும் பரமசிவனைத் துதிக்கிறேன். (இங்கு'காவேரி'என்பது நர்மதையோடு சேரும் ஓர் ஆறு)
பூர்வோத்தரே பாரலிகாபி4தா3நே ஸதா3சிவம் தம் கி3ரிஜாஸமேதம் |ஸுராஸுராராதி4த பாத3பத்3மம் ஸ்ரீவைத்யநாத2ம் ஸததம் நமாமி || 5 வடகிழக்கில் “பரலி'' என்னும் தி
ருத்தலத்தில் மலைமகளோடு கூடிய ஸதாசிவனாகி, தேவர்களாலும் அரக்கர்களாலும் பூஜிக்கப்பட்ட திருவடித் தாமரைகளையுடைய ஸ்ரீவைத்யநாதர் என்னும் பெயரில் எப்பொழுதும் வணங்குகிறேன்.ஆமர்த3ஸம்ஜ்ஞே நகரேச ரம்ய விபூ4ஷிதாங்க2ம் விவிதை3ச்சபோ4கை3: |ஸத்3பு4க்தி முக்தி ப்ரத3மீசமேகம் ஸ்ரீ நாக3நாத2ம சரணம் ப்ரபத்3யே || 6
ஆமர்தம் அல்லது தாருகாவநம் என்ற பெயர் பெற்ற அழகிய திருத்தலத்தில் பலவிதமான பாம்புகளை அணிகலன்களாய்க் கொண்டு தர்மத்திற்கு விரோதமில்லாத போகமும் மோக்ஷமும் ஒருங்கே கொடுக்கக் கூடிய ஒரே ஈச்வரனான திருநீற்று மேனியராக விளங்கும் நாகநாதரைச் சரணம் அடைகிறேன்.ஸாநந்த3மாநந்த3 வநேவஸந்தம் ஆனந்த3கந்த3ம் ஹதபாபப்3ருந்த3ம் |வாராணஸீ நாத2மநாத2 நாத2ம் ஸ்ரீவிச்வ நாத2ம் சரணம்ப்ரபத்3யே || 7 ஆனந்தவனம், வாராணஸீ என்னும் பெயர் கொண்ட காசீ நகரத்தில் பாபக்கூட்டங்களை ஒழிப்பவராயும், மகிழ்ச்சிக்கு மூலகாரணராயும், ஆதரவற்ற வர்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்துக் காப்பவருமான இன்பமயமான ஸ்ரீவிச்வநாதரைப் புகலிடமாய்க் கொள்கிறேன்.யோ டா3கிநீ சாகிநிகா ஸமாஜே நிஷேவ்ய மாண: பிசிதாசநைச்ச |ஸதை3வ பீ4மாதி3 பத3ப்ரஸித்3த4ம் தம் சங்கரம் பக்தஹிதம் நமாமி || 8 டாகிநீ சாகிநி (என்னும் சக்திகளை) கூட்டத்தாலும், அரக்கர்களாலும் பூஜிக்கப் பட்டவரும் பக்தர்களின் நன்மையிலேயே கருத்துள்ள புகழ்வாய்ந்த பீம என்னும் பெயரோடு கூடியவருமான சங்கரரை (பீமசங்கரரை) வணங்குகிறேன்.ஸ்ரீதாம்ரபர்ணீஜலராசியோகே3 நிப்3த்3த்4யஸேதும் நிசிபி3ல்வபத்ரை: |ஸ்ரீராமசந்த்3ரேண ஸமர்ச்சிதம் தம் ராமேச்சவராக்2யம் ஸததம் நமாமி || 9 தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் கலக்கும் இடத்தில் அணைகட்டி, இரவில் ஸ்ரீராமசந்திரரால் (வில்வங்களால்) நன்கு பூஜைசெய்ய வில்வங்களால்) நன்கு பூஜை செய்யப்பட்ட ராமேச்வரரை எப்பொழுதும் வணங்குகிறேன்.ஸிம்ஹாத்3ரிபார்சவேபி தடே ரமந்தம் கோ3தா3வரீ தீரபவித்ர தேசே |யத்3த3ர்சநாத்பாதகஜாதநாச: ப்ரஜாயதே த்ரயம்ப3கமீசமீடே3 || 10 ஸிம்மாத்ரி மலைத்தாழ்வரையில் இன்புற்றவரும், மிகப்புனிதமான கோதாவரி நதிக்கரையில் இருப்பவருமான எவரைக்கண்ட உடனே பாபக் கூட்டங்கள் அழிந்துவிடுமோ அந்த த்ரியம்பக ஈச்வரனைத்துதிக்கிறேன்.ஹிமாத்3ரிபார்ச்வேபி தடே ரமந்தம் ஸம்பூஜ்யமானம் ஸததம் முநீந்த்3ரை: |ஸுராஸுரைர்யக்ஷ மஹோரகா3த்2யை: கேதா3ரஸம்ஜ்ஞ ம் சிவமீசமீடே3 || 11 இமயமலைத்தாழ்வரையில் இன்புற்றவரும், சிறந்த முனிவர்களாலும், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், உரகர்கள் முதலிய எல்லோராலும் பூஜிக்கப்படுகிற சிவன், ஈசன் எனப் பெயர் பெற்ற கேதாரேச்வரரைத் துதிக்கிறேன். ஏலாபுரீ ரம்ய சிவாலயேஸ்மிந் ஸமுல்லஸந்தம் த்ரிஜ3கத்3வரேண்யம் |வந்தே3 மஹோதா3ரதரஸ்வபா4வம் ஸதா3சிவம் தம் தி4ஷணேச்வராக்2யம் || 12 ஏலாபுரம் (எல்லோரா) என்னுமிடத்தில் உள்ள அழகான சிவாலயத்தில் சிறந்து விளங்குபவரும், மூவுலகிலும் போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமையற்ற இயல்பை உடையவருமான திஷணேச்வரரான ஸதாசிவனை வணங்குகிறேன்.ஏதாநி லிங்கா3நி ஸதை3வமர்த்யா: ப்ராத பட2ந்த: அமல மாநஸாச்ச: |தே புத்ர பௌத்ரைச்ச த4நைருதா3ரை : ஸத்கீர்த்திபா4ஜ: ஸுகி2நோப4வந்தி ||
இந்த 12 லிங்கங்களின் துதியை தூயமனதுடன் காலையில் பாராயனம் செய்பவர்கள் பிள்ளை பேரன் அளவற்ற செல்வம் நல்ல புகழ் இவைகளுடன் நலனுடனிருப்பார்கள்.
#ஸ்ரீலட்சுமிஸ்தோத்திரம் #லட்சுமி #ஸ்தோத்திரம் #Tamil #Bhakthi #devotional #DurgaSongs #GodSongs #Tamil #Saraswathi #Durga #Lakshmi #HinduCulture #IndianFestival #இந்துமதம் #இந்தியகலாச்சாரம் #NaamHindu #பக்தி #நவராத்ரிபாடல்கள் #ஆன்மிகம் #சரஸ்வதி #துர்கா #லட்சுமி #ஹிந்து #நாம்ஹிந்து #IndianCulture #sriramanavami #ஸ்ரீராமா நவமி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: