Nadai kavithai | Dr. S Murugusundram
Автор: Dr S Murugu Sundram
Загружено: 2025-05-16
Просмотров: 1205
Описание:
நடக்க நடக்க
நமக்குள் நடப்பது என்ன
நம்ப முடியா ஆச்சரியங்கள் !!!
அடுத்தடுத்து நிகழும் அற்புதங்கள் !!!
அனைத்தும் ஆதாரபூர்வ...
அறிவியல் உண்மைகள் !!!
நிமிடம் ஒவ்வொன்றிலும்... நீங்களே உணரலாம்; நாள் ஒவ்வொன்றையும்...
நலமாய்த் தொடங்கலாம்...
ஒன்றாம் நிமிடத்திலேயே
ஒவ்வொரு செல்லுக்குள்ளும்... ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது !!!
அடுத்த நிமிடத்தில்
அங்கம் எங்கும் ஊக்கத்துடன்...
அருவி போல் குருதி பரவுகிறது !!!
மூன்றாம் நிமிடத்திலேயே
மூட்டுக்களின் இறுக்கம்... முற்றிலுமாகத் தளர்கிறது !!!
நான்காம் நிமிடத்தில்
நடை மிக எளிதாகிறது...
நாடி சீராகிறது !!!
ஐந்தாம் நிமிடத்தில் இருபத்து ஐந்து கலோரி ஆவியாகிறது...
யாரும் அறியாமலே !!!
ஆறாம் நிமிடத்திலேயே
அவசியமற்ற கொழுப்பு நீக்கம்... ஆரம்பம் ஆகிறது !!!
ஏழாம் நிமிடத்தில்
இதயத் துடிப்பு சீராகி...
இன்னிசை ஆகிறது !!!
நிமிடம் எட்டில்
நாளங்கள் அனைத்தும்...
நெகிழ்ந்து விரிகின்றன !!!
ஒன்பதாம் நிமிடத்தில்
உயிர்வளி எனும் ஆக்ஸிஜன்... உடலெங்கும் நிறைகிறது !!!
பத்தாம் நிமிடத்தில்
மொத்த உடலும் மனமும்...
சுத்தமாகித் தெளிகிறது !!!
பனிரெண்டாம் நிமிடத்தில்
பரவுகிறது உடலெங்கும் - ஓர் பதமான சூடும் சுகமும் !!!
பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் - தோல் பாங்காக வெளியேற்ற...
பதினாறாம் நிமிடத்தில்
பேராறாய்ப் பெருகும் வியர்வை...
பரிசுத்தமாக்குகிறது உடலை !!!
நிமிடம் பதினெட்டில்
நிரம்பி வழிகிறது மேலும் மேலும்...
நிகரில்லா உயிர்வளி !!!
இருபதாம் நிமிடத்தில்
இதுவரை கரையா இறுகிய கொழுப்பும்...
இளகத் தொடங்குகிறது !!!
இருபத்தைந்தாம் நிமிடத்தில்
இவ்வளவு புத்துணர்ச்சியா எனக்குள்?
என்று மனம் வியக்கிறது !!!
முப்பதாம் நிமிடத்தில்
முழு உடலும் மனமும்... முற்றிலுமாகத் தளர்கின்றன !!!
முப்பந்தைந்தாம் நிமிடத்தில்
மூளையின் மூலை முடுக்கெங்கும்...
முகிழ்க்கின்றன மகிழ் சுரப்புகள் !!!
நாற்பதாம் நிமிடத்தில்
நம்மைக் கவ்வியிருந்த மன அழுத்தம்...
நமக்கே தெரியாமல் விலகுகிறது !!!
நாற்பத்தைந்தாம் நிமிடத்தில்
நம் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து...
நம்மை ஆட்கொள்கிறது !!!
ஐம்பதாம் நிமிடத்தில்
ஆழ்கடல் போல் பேரமைதி அடைகின்றன உடலும் மனமும் !!!
நிமிடம் ஐம்பத்தைந்தில்
நினைத்துப் பார்க்க முடியாத
நிம்மதி நெஞ்சில் நிறைகிறது !!!
அறுபதாம் நிமிடத்தில் அன்றைய நாளுக்கான ஆற்றல்...
அனைத்தும் உங்களுக்குள் !!!
உங்களுக்காக...
உங்களுக்காக மட்டுமே -
நீங்கள் உங்களைக் காதலித்து...
ஒதுக்கும் இந்த உன்னத...
ஒரு மணி நேரம் - உங்கள்
உடலும் மனமும் பேசும் நேரம் !!!
வெஞ்சினம் குறையும் !!!
வினாக்கள் பல விடையறியும் !!!
வியத்தகு சிந்தனைகள் வித்தாகும் !!!
நடை புதிதாய்; நாள் புதிதாய்;
நல்லெண்ணங்கள் புதிதாய்...
நறுமலராய் காலை மலரும் !!!
ஆனந்தமாகும் உடலும் மனமும்...
அனுபவித்தால் மட்டுமே - சில அறிவியல் உண்மைகள்
புரியும் !!!
நடந்து பாருங்கள், நண்பர்களே...
நம்புவீர்கள் நான் நவின்றது - உயர்வு நவிற்சியல்ல; நடப்பியல் உண்மை என்று !!!
-முருகு
---
Follow Dr. S Murugusundram
Founder & Medical Director,
Chennai Skin Foundation & Yesudian Research Institute
---
[walking benefits, Tamil motivation, health and wellness, science of walking, body mind healing]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: