A powerful Prayer to Mother Mary in Tamil
Автор: TNcatholic
Загружено: 2015-09-16
Просмотров: 1001015
Описание:
எங்கள் திருஇருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே!
பரலோக பூலோக அரசியே!
கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே!
பாவிகளின் தஞ்சமே
உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையைத் வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ!
எங்கள் அன்பான அன்னை நீரே!
எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ!
நீர் எங்களுடைய தாயார் என்பதைக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களைத் தாய் பாராட்டு வாளோ?
உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும்.
அழுகிறவர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.
நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிடில் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?
நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே!
உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
ஆறு கடல்களை கடந்து ஓடிவந்தோம்.
துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ?
எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ?
அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா
தஸ்நேவிஸ் மாமரியே அம்மா!
எங்கள் குடும்பங்கள் முழுவதையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் ஆமென்.
தூத்துக்குடி பனிமய மாதாவிடம் கேட்டு வணங்குகள்.
அதிசயங்களை காண்பீர்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: