ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

குலதெய்வம் எங்கே என கண்டுபிடிப்பது எப்படி

Kuladeiva

kuladeivathai

kandupidippathu

eppadi

kulathaivam

குலதெய்வம்

தெரியாதவர்கள்

குலதெய்வத்தை

கண்டுபிடிப்பது

எப்படி

how to

kulathaivam theriyavillai endral enna seivathu

kulatheivathai kandupidippathu eppadi

குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது

குலதெய்வத்தை கண்டுபிடிக்க என்ன செய்வது

குலதெய்வத்தை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்

குலதெய்வம் எங்கே இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது

Автор: Alphanantha

Загружено: 2022-02-28

Просмотров: 104

Описание: குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்வது?
குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது?

#Kulatheiva_valipadu
#kuladeivam #kulasamy
_valipadu #How_To_Find_Kuladeiva_kovil
#kulatheivam #குலதெய்வம்_தெரியாதவர்கள்_என்ன_செய்வது
#குலதெய்வம்_எங்கே
#குலதெய்வம்_எது
#குலதெய்வம்_யார்
#குலதெய்வத்தை_கண்டுபிடிப்பது_எப்படி

#குலதெய்வம் தெரியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா...

#இதோ அறிந்துகொள்ள 5 வழிகள்!

#வாழ்வில் தொடர்ந்து கஷ்டங்களையே சந்திப்பவர்கள், தங்கள் கஷ்டங்களுக்கான தீர்வை நாடி மகான்களையோ ஜோதிடர்களையோ அணுகினால் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் பதில் குலதெய்வத்தைக் கும்பிடுங்கள் என்பதுதான். இப்படி நாடிச் செல்பவர்கள் பலருக்கும் தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமலே இருப்பார்கள் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

'நாள் செய்யாததைக் கோள் செய்யும். கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும்' என்பது பழமொழி. நடக்காத காரியங்களையும் நடத்தித் தரும் வலிமை குலதெய்வங்களுக்கு உண்டு. பெற்றவர்கள் எப்படிக் குழந்தைகளைத் தங்கள் கண்களுக்குள் வைத்துக் காக்கிறார்களோ அப்படிக் குலதெய்வமும் தன் வம்சத்து மக்களைக் காக்கும். ஆனால் பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் நாடுவிட்டு நாடுபோய் வாழும் இரண்டு மூன்று தலைமுறை கடந்தவர்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை விட்டுவிடுவதால் அடுத்த தலைமுறைக்குத் தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமல் போகிறது.

#காவல் தெய்வம்!
‘துன்பங்கள் தீர குலதெய்வத்தைத் தேடிப்போ’ என்று ஜோதிடர்களோ மகான்களோ சொன்னதும் தங்கள் குலதெய்வம் எது என்று தேட ஆரம்பிப்பார்கள். சொந்த ஊர் சென்று பழைய மனிதர்களைச் சந்தித்தால் சிலருக்கு விடை கிடைத்துவிடும். ஆனால் பலருக்கு அந்த வாய்ப்பும் இருக்காது. அப்படிக் குலதெய்வம் தெரியாதவர்கள் தங்கள் குலதெய்வத்தைக் கண்டுபிடித்துக் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி?


#குத்துவிளக்கு
தேடினால் கிடைக்கும் தெய்வம்...
பொதுவாகக் குலதெய்வத்தை நாம் மறந்திருந்தாலும் குலதெய்வம் நம்மை மறப்பதில்லை. நமக்காக அது காத்திருக்கும். எப்படிப் பெற்றோர் பிள்ளைகளைத் தேடிக் காத்திருப்பார்களோ அப்படிக் காத்திருக்குமாம் குலதெய்வம். அதனால் தன்னை மறந்து வாழும் தன் பிள்ளைகள் தன்னைத் தேடினாலேயே உடனே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுமாம்.

#வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முகக் குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாத்தி, பூ சுற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.

#தியானம் செய்தால் தரிசனம் கிடைக்கும்
குத்துவிளக்கின் முன்பாகக் கண்மூடி தியானம் செய்தால் குல தெய்வம் சிலருக்கு மனக்கண்ணில் தோன்றும். சிலருக்கு ஓரிரு நாள்களிலேயே இந்த தரிசனம் கிட்டிவிடும். சிலருக்கு மாதக் கணக்கில் கூட ஆகலாம்.

#அப்படியும் குலதெய்வத்தை அறிந்துகொள்ள முடியவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. புதிய காமாட்சி விளக்கொன்றை வாங்கி அதை சந்தன குங்குமம் இட்டு அலங்கரித்து பூ சூட்டி விளக்கேற்றி அதையே குலதெய்வமாகக் கருதி வணங்கலாம். நம் குலதெய்வம் அதில் வந்து வாசம் செய்து வழிகாட்டும்.


#தவிர்க்கக் கூடாத தலைவாசல் பூஜை
வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டுப் புதுத் துணி சாத்தி, வெற்றிலை பாக்கு, பழம், பொங்கல் வைத்து நிவேதனம் செய்து பூஜை செய்து வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றிய தகவல் நம் வீடுதேடிவரும்.

#வாசல்
குலதெய்வம் எதுவென்று தெரிந்தும் அதை வழிபாடு செய்யாமல் இருப்பது பெரும்பாவமாகும். எனவே வருடத்துக்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். குலதெய்வம் உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் கையால் ஓர் அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே போதும். அவர்கள் எப்போதுமே உங்களை காத்து ரட்சிப்பார்கள், இது சத்தியம்.

#சரி, குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின்மேல் ஈடுபாடு என்று பாருங்கள்.
பரம்பரையாக , ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்ப சாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவா இல்லை.

இல்லையா , அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
சதுரகிரி அருகில் இருப்பவர்கள் – மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம்.

இல்லையா , திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.
திருச்செந்தூர் – குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம்.

இது ஒரு கால ரகசிய நுட்பம். இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் , உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை தடங்கல்களையும் தாண்டி , ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை நம்மில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்!

#குலதெய்வம்_கனவில் வர_மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
இஷ்ட தர்ஷய நமஹா!!

இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,
ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால்
பயன்படுத்தப்படுகிறது. குல தெய்வம் அறியும் வழிபாடு.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
குலதெய்வம் எங்கே என கண்டுபிடிப்பது எப்படி

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]