தாமரை கிழங்கு சமையல் | 🪷Lotus 🫚root🫕cooking | Healthy recipe
Автор: Nalla Oorum Naalu Perum
Загружено: 2024-10-09
Просмотров: 3073
Описание:
66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன.
நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது. மேலும் தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும் தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.
பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.
குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது. ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.
தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச அழற்சியை போக்க உதவுகிறது. தாமரை வேரில் நார்ச்சத்துக்கள் இருப்பது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலை போக்கி மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. தாமரை வேரை சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து குறைபாடும் நீங்கும்..!
#தாமரை #தாமரைக்கிழங்கு #rarefood #healthyfood #nallaoorumnaaluperum #villagelifestyle #villagecooking #lotusroot
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: