பாரதமாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா
Автор: MEDIA 360 News
Загружено: 2023-07-16
Просмотров: 44
Описание:
பாரதமாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா
கோவை உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா கோவை உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம் கௌரிசங்கர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சமூக சேவகரும் லயன்ஸ் கிளப் ஆப் கிராண்ட் நிர்வாகியுமான அகஸ்டின் மற்றும் கோவை செளரிபாளையம் கத்தோலிக்க தேவாங்க திருச்சபை செயலாளர் பாபு எம் கென்னடி, பொருளாளர் சகாயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு புத்தாடைகளை வழங்கியும் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா பேச்சு- கட்டுரை -ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து, ஆடிட்டர் வி. எம் வெண்ணிலா, பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்கள்.
முன்னதாக பள்ளி மாணவ மாணவியர் உள்ளிட்ட அனைவரும் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிப்பு மற்றும் பிஸ்கட்டுகளை பாரத மாதா அறக்கட்டளை நிர்வாகிகள் சரவணன் சக்திவேல் சுரேஷ் சரண்ராஜ் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியருடன் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.
பள்ளி மாணவ மாணவியருக்கு புத்தாடைகளை வழங்கிய சவுரி பாளையம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த வினோ டெக்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த பாஸ்கர் மற்றும் வினோதினி பாஸ்கர் அவர்களுக்கு பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாகிகளும் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக் கொண்டனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: