குதிரைமொழி கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா திருவிளக்கு பூஜை...
Автор: Chendur news 2025
Загружено: 2025-12-15
Просмотров: 671
Описание: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரை மொழி கிராமத்தின் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் தொடங்கியது. இன்று திங்கட்கிழமை மாலை மாவிளக்கு பூஜை, புஷ்பாஞ்சலி, இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கற்குவேல் அய்யனாருக்கு அபிஷேக பால்குடம் எடுத்து வருதல், பேச்சியம்மன் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறைஇணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, ஆய்வர் முத்து மாரியம்மாள், செயல் அலுவலர் காந்திமதி, அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர்கள் குமார் ,பிரபா, முருகப்பெருமாள், முத்துக்குமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: