சுழிமுனை நாடி யோகம் (பாகம் 3)
Автор: Thirumoolar Vethasatthi Academy
Загружено: 2024-08-05
Просмотров: 562
Описание:
சுழிமுனை நாடி யோகம்
கோவை, திருமூலர் வேதசத்தி அகாடமி, சுழிமுனை நாடி யோகம் என்ற யோகப் பயிற்சியைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளது.
சுழிமுனை நாடி யோகம் யோக மார்க்கங்களுக்கு மூலமாகவும், விரிவாகவும் உள்ளது.
ஆன்மீக உயர்வுக்கும், உடல், மன நலத்திற்கும், சுழிமுனை நாடி யோகமே அடிப்படையாகும்.
சுழிமுனை நாடி யோகம் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கும் வல்லமை உடையது.
யோகம் என்ற இணைப்பிற்கும் இதுவே மூலம்.
ஆதார யோகம், கேசரி யோகம், வாசி யோகம், முப்பாழ் தியானம், வெட்டவெளி தியானம், ஓங்கார தியானம், அட்டமாசத்தி, அட்டமா யோகம், அட்டமா கருமம் ஆகிய யோக தியானங்களுக்கும், சமாதி முறைகளுக்கும் இதுவே அடிப்படை.
யோகம் மார்க்கத்திற்கு உயர்வாக கருதப்படுகின்ற பிரசாதக்கலை என்ற பிராணனின் இயக்கத்திற்கு இதுவே மூலம்.
வேதசத்தி வற்மக்கலை ஆனாலும், சித்த வர்மம், மர்ம சிகிச்சைக்கும் பிரசாதக்கலை தான் அடிப்படை. அந்த பிரசாத கலைக்கு சுழிமுனை நாடி யோகமே மூலமாகும்.
பிராண கலை, சக்தி கலை, சிவ கலை நுட்பத்தை உணர்வதற்கு சுழிமுனை நாடி யோகமே அடிப்படை.
இந்த ஒரு நாள் வகுப்பில் சுழிமுனை நாடி யோகத்தின் முதல் நிலை பயிற்சி, செய்முறையோடு கற்பிக்கப்படும்.
பின் குறிப்புகள்:
இப்பயிற்சிக்கு அடிப்படை மனமும் மூச்சுக்காற்றும் தான். இந்தப் பயிற்சியில் மூச்சுக்காற்றை உடலுள் பல இடங்களில் நிறுத்திப் பழகவேண்டும். அதனால் சில எச்சரிக்கையும் கவனமும் தேவை.
அண்மையில் இருதய சிகிச்சை செய்து கொண்டவர்களும் மூளை சிகிச்சை பெற்றுப் கொண்டவர்களும் ஒரு ஆண்டு கழிந்த பின்பு இப்பயிற்சியை எடுத்துக் கொள்வது நல்லது.
Uterine prolapse, rectal prolapse, inguinal hernia போன்ற பாதிப்பு உள்ளவர்கள் இப்பயிற்சியைத் தவிர்க்கலாம். இவர்களுக்கு வேறுவிதமான பயிற்சி பின்னர் வழங்கப்படும்.
சுழிமுனை நாடிப் பயிற்சிக்கு வருகின்றபொழுது முழுமையான கறுப்பு உடை வேண்டாம்.
இப்பயிற்சியை தினமும் காலை மாலை என இருவேளை செய்ய முடியும் என நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் வரவும். இப்படி செய்ய இயலாதவர்கள் காலத்தை வீண் செய்ய வேண்டாம்.
இப்பயிற்சி நம் ஒவ்வொருவர் வளர்ச்சிக்கும் உரியது. இதைப் படித்துவிட்டுப் பிறருக்கு தொழில் ரீதியாகக் கற்பிக்கலாம் என்ற எண்ணம் உடையவர்களும் வருவதைத் தவிர்க்கலாம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: