இழந்த பதவி இழந்த செல்வம் மீண்டும் கிட்ட அருளும் பெருமாள் இவர்தான்
Автор: Thennai Tv
Загружено: 2025-09-06
Просмотров: 2157
Описание:
இழந்த பதவி இழந்த செல்வம் மீண்டும் கிட்ட அருளும் பெருமாள் இவர்தான் @youtube.comthennaitv #vaikundha #kumbakonam #perumaltemple #kumbakonamtemples #lordindra #wealth #regainstrength
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் கோவிலின் பெயரே ஊரின் பெயராக அமைந்துள்ள ஷேத்ரம் சுந்தரபெருமாள் கோவில்.
சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும். 'சவுந்தரம்' என்றாலும் அழகு என்றே பொருள்படும். அப்படி சுந்தரனாக, பெருமாள் வீற்றிருக்கும் ஓர் அற்புத தலம்தான், பாபநாசம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில். ஆதியில் இந்த திருத்தலம் சுந்தர வனம் என்றும், சமீவனம் (வன்னி மரக்காடு) என்றும் போற்றப்பட்டுள்ளது.
பஞ்ச நதிகள் என்று போற்றப்படும் காவிரியாறு, அரசலாறு, குடமுருட்டியாறு, திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறு ஆகிய ஆறு நதிகளுக்கு நடுவே சவுந்தரவல்லி தாயாருடன் எழுந்தருள் புரிகின்றார் சவுந்தரராஜப் பெருமாள்.
ஒரு சமயம் இந்திரனுக்கு சாபத்தால் வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அதோடு, தனது இந்திர பதவியையும் இழந்தான். சாதாரண மானிடனாக மாறி, இப்பூவுலகை அடைந்தான். விமோசனம் வேண்டி அலைந்து திரிந்தான். பின் இச்சுந்தரவனத்தை அடைந்த இந்திரன், நாரதரின் தரிசனம் கிடைக்கப்பெற்றான்.
அவர் இந்திரனுக்கு '360 வெண் பூசணிக்காய்களை தினமும் ஒரு அந்தணர் வீதம் 360 அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெண்குஷ்ட நோய் நீங்கும்' என்று ஆலோசனை கூறினார். அதன்படி வெண்பூசணிக்காயை தினமும் ஓர் அந்தணர் வீதம் கொடுத்து வந்தான் இந்திரன். ஒருநாள் அந்தணர் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை. பல இடங்களில் தேடியும் அந்தணர் ஒருவரும் அகப்படவில்லை. மிகவும் மனம் வருந்தினான் இந்திரன். நாராயணரை வேண்டி நின்றான்.
மனமிறங்கிய மலையப்ப சுவாமி, ஓர் ஏழை அந்தணராக இந்திரன் முன் வந்து நின்றார். மனம் மகிழ்ந்த இந்திரன், அவருக்கு வெண்பூசணியை தானம் செய்தான். என்னே ஆச்சரியம்? உடனடியாக இந்திரன் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெற்று, பழைய நிலையை அடைந்தான். திருமாலும் தனது அந்தண ரூபத்தை மாற்றிக்கொண்டு, பன்னீர் மரத்தடியில் சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜ பெருமாளாக, சுந்தர ரூபத்தில் காட்சி அருளினார்.
இதனால் இங்கு வழிபடுவோருக்கு இழந்த பதவி, இழந்த செல்வம் ஆகியன மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சனாதனம் எனப்படும் இந்துமதத்தின் கடவுள்கள், விரதங்கள், வழிபாட்டு முறைகள், பண்டிகைகள் மற்றும் அவற்றிற்கான காரண காரியங்கள் குறித்த செய்திகள், புராணக் கதைகளின் பின்னணி, இந்து திருக்கோயில்கள் அவற்றின் வரலாறு மற்றும் அவற்றின் பெருமைகள் போன்ற பல அரிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதே தென்னை டிவியின் சீரிய நோக்கம்.
உலகின் வேறெந்த மதங்களையோ அவற்றின் கோட்பாடுகளையோ தாழ்த்துவது இதன் நோக்குமல்ல. மக்கள் அனைவரும் பக்தியின் பாதையில் சென்று நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டுவதே இலட்சியம்.
Tennai TV's objective is to bring to the people many rare news about the gods of Hinduism known as Sanatanam, Vrats, rituals, festivals and their causes, background of mythological stories, Hindu temples, their history and their glory.
It is not intended to belittle any other religions of the world or their doctrines. The ideal is that all people should follow the path of devotion and lead a good moral life.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: