ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

🪷Nataraja Pathu (Tamil)🪷 🪷நடராஜர் பத்து 🪷   ஈசனே சிவகாமி நேஸனே  பாடல்

Автор: Shloka Sangrah

Загружено: 2026-01-12

Просмотров: 263

Описание: 🪷Nataraja Pathu (Tamil)🪷

🪷நடராஜர் பத்து 🪷
     பாடல்

 நடராஜர் பத்து

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ ,புனலும்நீ அனலும் நீ
மண்டலம் இரண்டேழும் நீ,

பெண்ணும் நீ ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ,
பிறவும் நீ ஒருவநீயே,
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே,

பொன்னும் நீ ,பொருளும் நீ
யிருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குருநீ,
புகழ் ஒணாக் கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த
புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என்
குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 1

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கைசிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட
தண்டை புலியுடை யாட
குழந்தை முருகேசனாட,

ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியாட பாலகருமாட,
நரை தும்பை அறுகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட,

வினையோட உனைப்பாட
எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்,

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்,
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்தி லேனை,

தடமென்ற மிடிகரையில் பந்த பாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாதிருப்பதுன் னழகாகுமோ,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 3

பம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல,
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல,

அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல,
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
அரியமோ கனமுமல்ல,

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி,
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போகமுனி யிவரெலாங் கூறிடும் வைத்தியமுமல்ல,

என்மன துன்னடி விட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகல வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 4

நொந்து வந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ ,
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ ,

சந்தமுந் தஞ்சமென் றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ ,
தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ,

விந்தையும் ஜாலமும் உன்னிட மிருக்குதே
வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ,

இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனியுன்னை விடுவதில்லை,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சை யில்லாத போதிலும்,
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்,

மொழியெகனை மொகனையில் லாமலே பாடினும்
மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமே கவரினும்
முழுகாமியே யாகினும்,

பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலனைக் காக்கொணாதோ,

எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ,

முன் பிறப்பென்னவினை செய்த னென்றழுவனோ
என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்திவரு மென்றுணர்வனோ,

தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென்ன வென்றழுவனோ,
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ,

இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழுவனோ
யெல்லாமுரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 7

காயாகும் முன் மரம்மீது பூ பிஞ்சு அறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,

தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
தந்த பொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்துக் கொலைகளவு
செய்தனோ
தவசிகளை யேசினனோ,

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,

ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி,
தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்தென்ன,
தாரணியையாண்டு மென்ன,

சேயர் களிருந் தென்ன
குருவா யிருந்தென்ன
சீடர்களிருந்து மென்ன,
சித்துபல கற்றென்ன,
நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,

ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன்,

யார்மீது உன்மன மிருந்தாலு முன்கடைக்,
கண்பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ,
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ,

என்னெனை மோகமோ இதுவென்ன கோபமோ
இதுவேவுன் செய்கைதானோ,
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,

உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையோ,

என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே. 10

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
🪷Nataraja Pathu (Tamil)🪷 🪷நடராஜர் பத்து 🪷   ஈசனே சிவகாமி நேஸனே  பாடல்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

🪷Shiva Stuthi🪷Kara Charana     Krutham Va🪷ஶிவ ஸ்துதி🪷கர சரண கிருதம் வா🪷शिव स्तुति🪷करचरण कृतं वा🪷

🪷Shiva Stuthi🪷Kara Charana Krutham Va🪷ஶிவ ஸ்துதி🪷கர சரண கிருதம் வா🪷शिव स्तुति🪷करचरण कृतं वा🪷

🔥 இப்பிறவி முற்பிறவி சாபம் தீர்க்கும் Agathiyar மந்திரம் | 48 நாட்கள் கேட்டால் வாழ்க்கை மாற்றம் ✨

🔥 இப்பிறவி முற்பிறவி சாபம் தீர்க்கும் Agathiyar மந்திரம் | 48 நாட்கள் கேட்டால் வாழ்க்கை மாற்றம் ✨

⚡️ Кремль экстренно созвал Совбез || Путин принимает условия США

⚡️ Кремль экстренно созвал Совбез || Путин принимает условия США

ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song

ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song

АВИЦЕННА ЗНАЛ: ПОЖИЛЫЕ, НЕ МОЙТЕСЬ ТАК! ЭТО КРАДЕТ ГОДЫ ЖИЗНИ!

АВИЦЕННА ЗНАЛ: ПОЖИЛЫЕ, НЕ МОЙТЕСЬ ТАК! ЭТО КРАДЕТ ГОДЫ ЖИЗНИ!

1000 விதமான பிரச்சினையை, கஷ்டத்தை நீக்கும் நரசிம்ம மந்திர ஸ்துதி

1000 விதமான பிரச்சினையை, கஷ்டத்தை நீக்கும் நரசிம்ம மந்திர ஸ்துதி

ODI ODI ODI ODI UTKALANTHA JOTHI ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi

ODI ODI ODI ODI UTKALANTHA JOTHI ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi

நடராஜப் பத்து - Natarajar Pathu - JukeBox | Sivan Songs | Sivapuranam D V Ramnani | Vijay Musicals

நடராஜப் பத்து - Natarajar Pathu - JukeBox | Sivan Songs | Sivapuranam D V Ramnani | Vijay Musicals

#போற்றி_திரு_அகவல் | Thiruvasagam | Potri thiru agaval | சிவ. தாமோதரன் அய்யா | தமிழர்சமயம்

#போற்றி_திரு_அகவல் | Thiruvasagam | Potri thiru agaval | சிவ. தாமோதரன் அய்யா | தமிழர்சமயம்

ПОСЛЕ СМЕРТИ ВАС ВСТРЕТЯТ НЕ РОДСТВЕННИКИ, А.. ЖУТКОЕ ПРИЗНАНИЕ БЕХТЕРЕВОЙ. ПРАВДА КОТОРУЮ СКРЫВАЛИ

ПОСЛЕ СМЕРТИ ВАС ВСТРЕТЯТ НЕ РОДСТВЕННИКИ, А.. ЖУТКОЕ ПРИЗНАНИЕ БЕХТЕРЕВОЙ. ПРАВДА КОТОРУЮ СКРЫВАЛИ

ஸ்ரீ நரசிம்மர் கவசம் - தமிழில் | Sri Lakshmi Narasimhar Kavasam | Narasimha Jayanti | Anush Audio

ஸ்ரீ நரசிம்மர் கவசம் - தமிழில் | Sri Lakshmi Narasimhar Kavasam | Narasimha Jayanti | Anush Audio

 🪷 Namāmīśamīśāna 🪷 NAMAMISHAANA🪷 நமாமீஶமீஶான 🪷 नमामीशमीशान🪷Shloka Sangrah🪷

🪷 Namāmīśamīśāna 🪷 NAMAMISHAANA🪷 நமாமீஶமீஶான 🪷 नमामीशमीशान🪷Shloka Sangrah🪷

லிங்காஷ்டகம் தமிழில் | Lingashtakam Tamil With Lyrics | Powerful Sivam Bakthi Padalgal

லிங்காஷ்டகம் தமிழில் | Lingashtakam Tamil With Lyrics | Powerful Sivam Bakthi Padalgal

தொல்லை இரும்பிறவி | சிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam | Vijay Musicals

தொல்லை இரும்பிறவி | சிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam | Vijay Musicals

Мантра от всех болезней! Мантра Аюрведы 108 раз. Дханвантари Мантра. См. описание.

Мантра от всех болезней! Мантра Аюрведы 108 раз. Дханвантари Мантра. См. описание.

வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song

வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song

Lalitha Sahasranamam with Tamil Lyrics | லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | லலிதா தேவியின் 1000 நாமங்கள் |OMTV

Lalitha Sahasranamam with Tamil Lyrics | லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | லலிதா தேவியின் 1000 நாமங்கள் |OMTV

மன அமைதி தரும் குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் நீங்க |  சரவணபவாய  நமஹா! #murugan #meditation

மன அமைதி தரும் குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் நீங்க | சரவணபவாய நமஹா! #murugan #meditation

கந்த சஷ்டி கவசம்|kantha sasti kavasam|கேளுங்கள் 36 முறை தினமும் நன்மை பெற| முருகனின் அருளால்.🙏

கந்த சஷ்டி கவசம்|kantha sasti kavasam|கேளுங்கள் 36 முறை தினமும் நன்மை பெற| முருகனின் அருளால்.🙏

அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI

அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]