அம்மன் அருள் பெற அம்பா சாம்பவி அகிலாண்டேஸ்வரி பக்தி பாடலை சக்தி தேவிக்கு உகுந்த நாட்களில் கேளுங்கள்
Автор: மகத்துவ மந்திரம்
Загружено: 2023-01-13
Просмотров: 25526
Описание:
வேண்டிய வரங்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதில் சக்தி தேவிக்கு நிகர் இந்த உலகத்தில் வேறு எந்த சக்தியும் கிடையாது. பூமியில் இருக்கக்கூடிய உயிரினங்களை எல்லாம் தன்னுடைய குழந்தைகளாக பாவித்து ஒரு தாயாக இருந்து காத்து ரக்ஷிப்பவள் ஆயிரம் கண்களை கொண்ட பராசக்தி. எந்த அம்மனாக இருந்தாலும் சரி, எல்லா அம்மன் சொரூபமும் அந்த சக்தி தேவி தானே. எந்த அம்மனை உங்களுடைய இஷ்ட தெய்வமாக நினைத்துக் கொண்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த வழிபாட்டை செய்ததாலும் சரி, இந்த ஒரு சொம்பு தண்ணீருக்கு அந்த அம்மன் மனம் மயங்கி நீங்கள் கேட்ட வரங்களை உடனே அள்ளிக் கொடுத்து விடுவாள். சுலபமான இந்த கலச சொம்பு பரிகாரத்தை எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா.
அம்மனுக்கு உகந்த கிழமை என்றால் அது வெள்ளிக்கிழமை தான்.
வெள்ளிக்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு பூஜையறைக்கு வந்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு வழக்கம் போல வெள்ளிக்கிழமை பூஜை வேலை எல்லாம் முடித்து பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கக்கூடிய எச்சில் படாத சில்வர் சொம்பில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். அந்த சொம்பு நிறம்ப குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி நன்றாக ஒரு கைப்பிடி மஞ்சள் தூளை எடுத்து, அந்த சொம்பில் போட்டு, இரண்டு கொத்து வேப்பிலைகளையும் அந்த தண்ணீரில் போட்டு பூஜை அறையில் வைத்து விட்டு அம்பாலை அழையுங்கள். அந்தத் தாய் சந்தோஷமாக வந்து அந்த சொம்பு தண்ணீரில் இறங்கி விடுவாள்.
அதன் பின்பு சொம்பு தண்ணீரை எடுத்து இரண்டு உள்ளங்கைகளில் வைத்து விட்டு அம்பாலை மனதார நினைத்து மனமுருகி உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். வரம் கேளுங்கள். எவ்வளவு பெரிய கோரிக்கையாக இருந்தாலும் சரி, எவ்வளவு சிறிய கோரிக்கையாக இருந்தாலும் சரி, நீங்கள் வைத்த அந்த வேண்டுதல் நேரடியாக அந்த அம்பாளின் செவிகளில் விழும். வேண்டுதல் வைத்த ஒரு சில நாட்களிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறி விடும்.
குறிப்பாக வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் நொடி பிரச்சனை இருக்கிறது. தீராத வியாதி, மருந்து சாப்பிட்டும் குணம் அடையவில்லை என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் சுப காரியத்தடை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமணம் வரம் வேண்டி, குழந்தை பேரு பாக்கியம் வேண்டி, இந்த பரிகாரத்தை செய்யலாம். குடும்பத்தின் நலனுக்காக நீங்கள் எதை வேண்டுமென்றாலும் அந்த தாயிடம் கேட்கலாம்.
வெறும் பணம் காசை மட்டும் கேட்பது வேண்டுதல் அல்ல என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்வோம். ஒருமுறை, ஒரு வேண்டுதலுக்காக இந்த பரிகாரத்தை செய்து அம்மனின் மீது பாரத்தை போட்டுவிட்டு உங்களுடைய வேலையை பார்க்கத் தொடங்குங்கள். பிறகு சில நாட்களில் நடக்கக்கூடிய சம்பவங்கள், இந்த பரிகாரத்தின் மீது உங்களை அறியாமலேயே ஒரு நம்பிக்கையை கொண்டு வந்து விடும். பிறகு வாழ்க்கையில் துன்பம் என்பது இருக்காது.
தெய்வீக மகத்துவ மந்திரங்களுக்காக, இந்த சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு உடனுக்குடன் மகத்துவ மந்திரங்கள் வந்து சேர மறக்காமல் notification bell button - ஐ click செய்து கொள்ளுங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: