அறிவியல்தமிழ் என்றால் என்ன ? | What is Scientific Tamil ? | Ariviyal Tamil
Автор: Ariviyal Tamil
Загружено: 2019-11-13
Просмотров: 20667
Описание:
**********************************
Follow us :-
❤ Subscribe Channel : http://bit.ly/2r85PCM
❤ Facebook Page : http://bit.ly/2KBN1Tu
❤ Instagram : https://bit.ly/2zl0mfS
❤ Twitter : http://bit.ly/2QRrnwA
❤ Blogger : http://ariviyaltamil2020.blogpot.com
**********************************
Contact us :-
❤ Email : [email protected]
**********************************
பொதுவாவே ஒரு மொழிக்கும் அத பேசுற மனித சிந்தனைக்கும் ஒரு வலுவான தொடர்பு இருக்குன்னு அறிவியல் நமக்கு விளக்குது. தமிழ் மொழி மூலமா அறிவியல் தொழில்நுட்பங்களையும் அது தொடர்பான செய்திகளையும் படிக்கும் போது ஒரு வேறுபட்ட புரிதல் அவங்களுக்கு கிடைக்கிறது மட்டும் இல்லாம, அது வேறுபட்ட சிந்தனைக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுக்குது.
நம்ப தமிழ் மொழி இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்னு மூன்று தமிழா பிரிக்கப்பட்டாலும் இன்னக்கு வளர்ந்து வரும் அறிவியல் சூழலுக்கு ஏற்ப நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழாகவும் பரிணாம வளர்ச்சி பெற வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டிருக்கு.
சுருக்கமா சொல்லனும்னா நம் தமிழ் மொழியில பொதிந்தி கிடக்குற அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகள வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவும், அதேமாதிரி மற்ற மொழிகள்ல இருக்குற அறிவியல் நுட்ப செய்திகள தமிழ் மொழியில கொண்டு வந்து சேர்க்கவும் அறிவியல்தமிழ் பயன்படுதுனு சொல்லலாம். இங்க அறிவியல் - தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெற்று இருக்குற அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டிக்காட்டுது.
தமிழர்களுக்கு அறிவியல் ஒன்னும் புதுசு இல்லன்னாலும் அறிவியல்தமிழ் இக்காலக்கட்டத்துல மேலைநாடுகள்ள காணப்படுற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழ்ல, தமிழ்ச்சூழலிக்கு ஏற்றார்போல ரொம்பவே சிறப்பா கொண்டுவந்து சேர்க்குதுன்னே சொல்லலாம். தமிழர்களோட வரலாறு, பண்பாடு, சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முகத் தேடல்களுக்கு அறிவியல்தமிழ் உதவுதுன்னே சொல்லலாம்.
தமிழ்நாட்டில் 74% பேர் மட்டுமே படிப்பறிவு உள்ளவங்க. இதில பெரும்பாலானவங்க தமிழ முதன்மை பாடமா கொண்டு படிச்சவங்க. இலங்கையில தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழியிலத்தான் கல்விய படிக்கிறாங்க. மலேசியாவுல பெரும்பாலான தமிழ் மாணவர்களோட அடிப்படைக் கல்வியே தமிழ்தான். சிங்கப்பூரில எல்லா நிலையிலையும் தமிழ் ஒரு பாடமாக இருக்கு
இப்படி கல்வி மொழியா விளங்குற தமிழ் மொழிய படிக்கிற மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகள பற்றியும் கத்துகனும். அப்படி கத்துகனும்னா அந்தந்த துறைசார்ந்த அறிவியல் தகவல்கள் தமிழ் மொழியில இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அதற்கு பெருந்துணை புரிவதுதான் இந்த அறிவியல்தமிழ்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: