குரு கவசம் | Guru Bhagavan Kavasam | Sri Guru Bhagavan | SPB | Amutham Music
Автор: Amutham Music
Загружено: 2020-06-17
Просмотров: 253294
Описание:
Guru Bhagavan kavacham | Lyrical Video | Album : Sri Guru Bhagavan | Singer : S P Balasubramaniam | Lyrics : Vaarasree | Music : Veeramani Kannan | Amutham Music
குரு பகவான் கவசம் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ குரு பகவான் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
பத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமாமி பிருகஸ்பதிம்
த்யானப் பொருளே மோனச்சுடரே
தேவைகளறியும் குருமுக உருவே
ஞானமளிக்கும் உந்தன் கவசம்
நாளுமுரைப்பேன் நன்மைகள் அருள்வாய்
பெருகிய தங்கம் உருகிய அங்கம்
பேறு அளிக்கும் நான்கு கரத்தாய்
கரமதில் தண்டம் ருத்திர மாலை
கமண்டலம் வர முத்திரை கொண்டாய்
பொன்னில் ஆடை சந்தனம் மஞ்சள்
பூணும் அழகு தேவபிரானே
அழகிய மணிமுடி அதிசய ஒளியில்
ஆனந்தம் தரும் ஆசிரியன் நீ
தொழுதிடும் தேவர்கள் உடன்வர எங்கும்
சுடர் அறிவேற்றிடும் சுந்தரனும் நீ
பொன்னிற குதிரைகள் பூட்டியத் தேரில்
புத்தொளி மஞ்சள் கொடியும் பறக்க
மின்னிடும் மேருவை சுற்றி வணங்கும்
மேதையின் வடிவாய் தோன்றிடும் குருவே
புஷ்யராகமணிமாலை அணிந்து
புவியினில் அடியவர் குறைகள் கலைந்து
கஷ்டகாலமதில் காவலளித்து
கண்ணிமையாலின் குருவென நின்று
வளரும் குருவருள் உன்னை வணங்கி
வளரவேண்டி நான் வாழ்த்துகிறேனே
ப்ரஹஸ்பதி என்ற நாமம் கொண்டவர்
பேரருள் கொண்டென் சிரசை காக்க
பெரிய குருவென்று பெயர் கொண்டவர்
என் பரவும் நெற்றியை பாங்குடன் காக்க
அமரர் குரு எந்தன் அழகிய செவியை
அன்புடன் எந்த நாளும் காக்க
புவனம் விளைகின்ற பொருளை அளிப்பான்
பொழிவு தோன்ற என் விழிகளை காக்க
சுரர்களுக்கு ஆச்சாரியன் எந்தன்
சுவாச நாசியை துணிவுடன் காக்க
வேத சாகரக் கரையைக் கண்டவர்
விரும்பியமர்ந்த நாவினைக் காக்க
இன்று நானுனை வேண்டுகிறேனே
எனது கவசமே நீ தான் குருவே
சர்வத்யனன் என்ற சர்வ வல்லமை
ஜகமதில் கொண்டார் முகம் அதை காக்க
சுபமான பலன் யாவும் வழங்கும்
சுந்தர குரு என் கைகளை காக்க
வரமழைப் பொழியும் வானாசிரியன்
வளரும் கைகளை நாளும் காக்க
வாக்கின் அதிபதி வாகீசன்
என் மார்பு பகுதியை வடிவுடன் காக்க
அழகிய வடிவம் அனுதினம் கொண்டார்
அடியவன் வயிற்றை அன்புடன் காக்க
மங்கள நீதியை சிந்தை அறிந்தான்
மகிழ்வுடன் நாவியை மலர்ந்து காக்க
எல்லாவற்றையும் இசைவுடன் தருபவன்
இடுப்பை காக்க இணைந்து காக்க
சொல்லற்கியலா புண்ணிய நெஞ்சார்
தொடைகளின் பகுதியை தோன்றிய காக்க
அறிவின் வடிவாம் அழகிய குருவே
அடிகளிரண்டை அன்புடன் காக்க
அகில விளக்காய் சுடரும் ஐயன்
அழகியதாக்கி கால்களை காக்க
யுவவடிவாகிய யவ்வனநாதன்
எல்லா அங்கமும் இசைவுடன் காக்க
தவ வடிவாகிய தர்மநாயகன்
தரணியில் என்றும் என்னை காக்க
என்றும் நானும் வேண்டுகிறேனே
எனது கவசமே நீதான் குருவே
ப்ரம்மவைவத்த புராணத்திலுள்ள
பெரும் பலன்கள் தரவல்ல ப்ரஹஸ்பதி கவசம்
இதனை காலம் மூன்றிலும் கட்டாயம் படிப்பவர்
எல்லா நலன்களையும் கண்டிப்பாய் பெறுவார்
குருவின் கருணையை அடைவார்கள்
ப்ரஹஸ்பதியின் ப்ரசாதத்தினால்
வெற்றிகொண்டு எங்கும் பூஜிக்க பெறுவார்கள்
ஓம் குருவே போற்றி . . .
ஓம் வியாழனே போற்றி . . .
ஓம் வாகீசனே போற்றி . . .
தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும். மேலும் தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் என்பதாகும் அதாவது ஞானகடவுள் ஆக இருக்கும் பரமகுரு தனது ஞானத்தை பக்தர்களுக்கு தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். "சிவ தலங்கள்" கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள். பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.
Music Download & Streaming
(Apple Music) : / sri-guru-bhagavan
Amazon : http://www.amazon.com/Sri-Guru-Bhagav...
Google Play Store: https://play.google.com/store/music/a...
For More Videos: / amuthammusic
/ amuthammusicsanskritseries
Follow us on: / amuthammusic
#Amuthammusic #Spbalasubramaniayam#srigurubhagavan
#Amuthammusic#spb##gurupeyarchi2020
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: