இழந்த செல்வத்தை மீட்டு தரும்
Автор: தேவார ஓசை | Thevara Osai
Загружено: 2023-07-06
Просмотров: 50504
Описание:
சிவாயநம
தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய "கொடுகு"
என்று தொடங்கும் திரு முருகன் பூண்டி பதிகம் பண்முறை 49 வது திருப்பதிக விளக்கம்.
07.049 கொடுகு வெஞ்சிலை வடுக
அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம்-திருமுறை
பண் : பழம்பஞ்சுரம்
நாடு :கொங்குநாடு
தலம் : முருகன்பூண்டி
Read more at: https://shaivam.org/thirumurai/sevent...
சிவாய நம, திருவருளால் தேவார ஓசை சேனலின் வளர்ச்சிக்கு , தாங்கள் உதவி செய்ய விரும்பினால் கூகுள் பே ஐடிக்கு அனுப்பவும்.
Google pay upi id : gloriousgopinath@okicici
எல்லாம்வல்ல ஈசன், உங்களுக்கு அருள் செய்யட்டும். வாழ்க வளமுடன் நலமுடன். சிவாய நம,
திருச்சிற்றம்பலம்🙏
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : gloriousgopinath@okicici
Thank you for your support!
Thiruchitrambalam 🙏
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது.
இத்தலம், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. அவினாசி-திருப்பூர் சாலையில் அவினாசியிலிருந்து சுமார் 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்துக்கு அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் திருப்பூர் தொடருந்து நிலையம்; வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் வானூர்தி நிலையம்.
இத்தலம் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகநாதேசுவரரைச் சுந்தரர் பாடியுள்ளார்:
“வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளும்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே.”— சுந்தரர்
முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன
.
Tirumuruganpoondi | Tamilnadu Temple | திருமுருகநாதர் Thirumuruganpoondi Temple History in Tamil - திருமுருகநாத சுவாமி
.
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 1 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 2 பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவ மொன் றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 3 பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 4 தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 5 விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 6 வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் ஏது காவல்கொண்
டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7 படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 8 சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 9 முந்தி வானவர் தாந்தொழு முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
ஒன்றுந் தாமி லரே.
சுவாமி : முருகநாதேஸ்வரர்; அம்பாள் : மங்களாம்பிகையம்மை. 10
Read more at: https://shaivam.org/thirumurai/sevent...
புராண பெயர், : திருமுருகன்பூண்டி ... திருமுருகன்பூண்டி - 641 652 திருப்பூர் மாவட்டம்.
#Tirumuruganpoondi #திருமுருகநாதர்
#திருமுருகன்பூண்டி #முருகநாதேசுவரர்கோயில்
#திருமுருகன்பூண்டிமுருகநாதேசுவரர்கோயில்
#திருமுருகன்பூண்டிமுருகநாதேசுவரர்பதிகம் #ThirumuruganpoondiTempleHistoryinTamil
#திருமுருகநாதசுவாமிகோவில்வரலாறு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: