2️⃣ Republic Day Special Tamil Song | DANCE SONG | நம் மனதோடு | Our Constitution, Our Pride
Автор: Writer Xavier
Загружено: 2026-01-11
Просмотров: 30516
Описание:
நம் மனதோடு மழையாக
ஆனந்தம் வீழும்
வெண்
பனியாக
தனியாக
சோகங்கள் நீங்கும்
நாம்
நேசத்தின் வழியாக
ஒன்றாக சென்றால்
நம்
தேசத்தின் தோளோடு
மாலைகள் வீழும்
*
நீள்
வரலாறு நமக்குண்டு
அதைக் காக்க வேண்டும்
வீண்
தகராறு எதுக்கென்று
அதை நீக்க வேண்டும்
நல்
தியாகங்கள் செய்தாரை
நாம் கற்க வேண்டும்
மென்
அன்பொன்றே வழியென்று
நாம் நிற்க வேண்டும்
வா
வருங்காலம் வளமாக
நாம் சேர வேண்டும்
நம்
அறமொன்றே வாழ்வென்று
புவி கூற வேண்டும்
*
நல்
வண்ணத்தில் கொடியிங்கு
அழகாக ஆடும்
நாம்
எல்லோரும் ஒன்றென்று
உயர்வாக கூறும்
வீண்
பேதங்கள் பார்க்காமல்
இதயங்கள் கூடும்
நாம்
இணைந்தாலே நம் தேசம்
அழகாக மாறும்
வா
மனமெல்லாம் மலராக
நாம் மாற வேண்டும்
நாம்
வழிகாட்டும் ஒளியென்று
புவி கூற வேண்டும்
#RepublicDaySong #TamilRepublicDay #JaiHind
#26January #IndianConstitution #VandeMataram
#TamilPatrioticSong #IndiaPride #FreedomAndUnity
#UnityInDiversity #IndianDemocracy #Bharath
#RepublicDay2025 #DeshBhakti #PatrioticTamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: