POONKURUVI PAADADI || SUNDHARA KAANDAM || MANO, BHAKYARAJ, BHANUPRIYA || VIJAY MUSICALS
Автор: Tamil Film Songs
Загружено: 2018-04-24
Просмотров: 638495
Описание:
பாடல் : பூங்குருவி பாடடி | ஆல்பம் : சுந்தர காண்டம் | பாடியவர் : மனோ | இயற்றியவர் : புலமைப்பித்தன் | இசை : தீபக் | வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் | தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் | தமிழ் பாடல்வரிகள் | தமிழ் சினிமா பாடல்
Song : Poonkuruvi Paadadi | Album : Sundhara Kaandam | Singer : Mano | Lyrics : Pulamaipithan | Music : Deepak | Video : Kathiravan Krishnan | Tamil Lyrical Cinema Song
பாடல்வரிகள் | LYRICS :
பட்டு பூச்சி வாழ்க்கையது எட்டு நாள் தானே
பறந்து வரும் ஈசலுக்கு ஒருநாள் தானே
அவை பறக்கலையா சிறகு விரிக்கலையா
வாழ்வை ரசிக்கலையா
பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்
மன பாரம் தீர தான்
வாழ்க்கையே ஒரு வரவு செலவு
வந்ததே ஒரு வரவு தான்
பூமியில் வந்த கணக்கு முடிஞ்சு
போகிறோம் அது செலவு தான்
கண்ணிமைக்கும் வேளை வானவில்லின் வாழ்க்கை
அதையெண்ணி வானவில் அழலாமா அழியகோலம் கெடலாமா
நூலுமில்லை அங்கே வாலுமில்லை இங்கே
பறக்குது வாழ்வெனும் காத்தாடி அடிக்கிற காற்றின் திசைதேடி
இன்று யார் இனி நாளையார் அதை யார்சொல்வது
வாழும்நாள்வரை வாழுவோம் விதி யார்வெல்வது
ஆனது ஆகட்டும் பார்ப்போம்
என வாழும் மனம் வேண்டும்
பூப்பதொரு காலம் காய்ப்பதொரு காலம்
இலையுதிர்காலமும் ஓர் காலம் என்றுமில்லையே கார்காலம்
காலமொரு ஓலை கொண்டுவரும் நாளை
நடப்பது காலத்தின் ராஜாங்கம் மீறிடயாருக்கு அதிகாரம்
மெய்யிலா உடல் ஒன்றையே இங்கு மெய்யென்கிறோம்
கானலை ஒரு கங்கையாய் தினம் நாம் காண்கிறோம்
பட்டினத்தார் அவர் போலே
மனம் வேண்டும் இனி மேலே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: