கோவில்பட்டியில் சர்வதேச உரிமை கழக அலுவலகம் திறப்புவிழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
Автор: Shen3 News
Загружено: 2023-12-09
Просмотров: 111
Описание:
கோவில்பட்டியில் சர்வதேச உரிமை கழகம் செயல் அலுவலகம் திறப்பு விழா - முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சர்வதேச உரிமை கழகம் செயல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் காளிராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் ஜான் வெஸ்லி முன்னிலை வைத்தார்,இதில் இணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் ,துணை பொதுச்செயலாளர் ராஜேஸ்வரி, மாநில வர்த்தகப் பிரிவு மாநிலச் செயலாளர் மணிமாறன், மகளிர் அணி மாநில செயலாளர் சின்னத்தாய் மாநில செய்தி தொடர்பாளர் மனோஜ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நகர மன்ற உறுப்பினர் கவியரசன், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், கிளைச் செயலாளர் மகேஷ் பாலா, இலக்கிய அணி பிரிவு மாவட்ட செயலாளர் போடு சாமி,கதர் ஸ்டோர்ஸ் சுப்புராஜ், மற்றும் சர்வதேச உரிமை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: