உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள் !
Автор: SIMMAM BALASUBRAMANIAN
Загружено: 2024-12-16
Просмотров: 702
Описание:
உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள் !!!
(1) சனிக்கிழமை அன்று காலை 7-8 மணிக்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும்.
(2) செவ்வாய் அன்று வீட்டின் தெற்கு பகுதியில் காலை 6-7 மணிக்கு 7 மண் அகலில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வேண்டி வந்தால் பல வருடங்களாக திரும்ப வராத கடன்கள் கூட திரும்ப கிடைக்கும். ஏமாந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்.நம்பிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் செய்து வர பலன் தெரியும்.
(3) 7 பல் உள்ள வெள்ளை பூண்டு வாங்கி பற்களை உரித்து 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி நம் வீடு, கடை ஆபீஸ் வாசலில் தொங்க விட்டு தூப தீபம் காட்டி வர வீட்டினுள் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் விரட்டப்படும். மேற்கொண்டு எதுவும் வராது. வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
(4) வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன் அருகம்புல்லின் நுனியை பறித்து பாக்கெட்டில் வைத்து செல்ல, செல்லும் காரியம் வெற்றியை தரும்.
(5) துளசி செடியையும் தொட்டாற் சிணுங்கி செடியையும் ஒரே தொட்டியில் வைத்து வீட்டில் வளர்த்து வந்தால் குடும்ப
சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.
(6) செல்கின்ற வேலை சுலபமாய் முடிய ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்லலாம்.
(7) மாணவ மாணவியர் படிக்கும் பொழுது இடது கையை மேஜையில் ஊன்றி படிக்க, படிக்கின்ற விஷயம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். பரிட்சை எழுதும் பொழுதும் இதை கடை பிடிக்கலாம்.
இவை அனைத்தும் நம் சித்தர்கள், மகரிஷிகள் அருளியது. நல்ல பலன் கொடுத்து வருகிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: