Sundaramoorthy Naayanar Varalaru Part 2 | சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Part 2 |
Автор: Kanikrish2021
Загружено: 2021-08-28
Просмотров: 183
Описание:
Sundaramoorthy Naayanar Varalaru #சுந்தரமூர்த்தி நாயனார்
வரலாறு #Nambiyaroorar #Sivan #Siva #Shivan #Natarajar #Kanikrish’s Vlog
Links for our Previous Videos…
Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் கோவில் |
• Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் க...
Virunchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 1 | • Virinchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுர...
Virunchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 2 |
• Virinchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுர...
Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Margabandheeswarar Temple Virunchipuram |
• Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Mar...
Veladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை|Sri Balamurugan Thirukovil|
• Veladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை...
Pallikonda Perumal Temple | பள்ளிகொண்ட பெருமாள் கோவில் | Sri Uthra Ranganatha Perumal Swamy |
• Pallikonda Perumal Temple | பள்ளிகொண்ட பெர...
Thillai Vaazh Andhanargal Varalaru| தில்லை வாழ் அந்தணர்கள் வரலாறு| Naayanmar Varalaru|
• Thillai Vaazh Andhanargal Varalaru| தில்லை...
Manikkavasagar Varalaru | மாணிக்கவாசகர் வரலாறு | Manivaasagar Varalaru | மணிவாசகர் வரலாறு |
• Manikkavasagar Varalaru | மாணிக்கவாசகர் வர...
Nambiyandar Nambi Varalaru | நம்பியாண்டார் நம்பி வரலாறு |
• Nambiyandar Nambi Varalaru | நம்பியாண்டார்...
Sekkizhar Peruman Varalaru | சேக்கிழார் பெருமான்வரலாறு |
• Sekkizhar Peruman Varalaru | சேக்கிழார் பெ...
Sundaramoorthy Naayanar Varalaru Part 1 | சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Part 1 |
• Sundaramoorthy Naayanar Varalaru Part 1 | ...
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினை, 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர். திருமணத்தினை தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள், 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.
சுந்தரர் தேவாரம்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம்.இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.
சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
தடுத்தாட்கொள்ளல்
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்".. என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை, தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
திருமணங்கள்
திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: