VANTHAN KADALODI | மீனவர் தின பாடல் 2025 | FISHER MAN SONG
Автор: Mathinan Hits
Загружено: 2023-11-21
Просмотров: 14872
Описание:
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இந்த வருடம் 2023 புதிய பாடல் பாடி வெளியிட்ட ஒரு வாய்ப்பு பாடல் வரிகளை எழுதிய தம்பி மணவை ஸ்டெபிலன் மூலம் கிடைத்தது..
இப்பாடல் இரண்டு நாளிலேயே உருவாக்கப்பட்ட பாடல்.
இதற்காக ஒத்துழைப்பு கொடுத்து உதவிய
இசை அமைப்பாளர் ராஜேஷ் ஹனி,
பாடகர் இர்வின் விக்டோரியா
அடாத மழையிலும் விடாது ரெக்கார்டிங் செய்து தந்த
நண்பர் ஆசிஸ் ஹவன் சந்திரன்,
எடிட்டிங் செய்த AVR மற்றும்
விசால்டோ மதினன்
ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்..
மதினன் ஹிட்ஸ்,
பெரியதாழை.
பாடல் வரிகள்:
தன்னா நான தன்னா தன தன்னா நான தன்னா - 2
வந்தான் கடலோடி
இவன் வங்கக்கடல் ஓடி
கடல் தொழிலை நம்பி பிழைக்கும் நாங்க நெய்தல் பூர்வகுடி
(ஏலேய் வந்தான்)
1
கச்சாங்காத்தும் வாடக்காத்தும்
மாறி மாறி வீசும் போது
மடக்கடியும் கடவோட்டும்
தூக்கி தூக்கி அடிக்கும் போது
சீரிப்பாய்ந்து படகில் வரும் சிங்கக்குட்டி கெத்தப் பாரு
மணப்பாட்டு சாலை மீனு
பெரியதாழை பாறை மீனு
புன்னைக்காயல் வாலை மீனு
ஆலந்தலை வாவல் மீனு
அமலிபுரம் சீலா மீனு
பட்டணத்து வெலை மீனு
சிங்கித்துரை கனவா மீனு இது
தூத்துக்குடி லாஞ்சு மீனுடா
மணப்பாட்டு சாலை மீனு மல்லிப்பூவுடா
பெரியதாழை பாறை மீனு
பொரியல் டேஸ்டுடா
புன்னைக்காயல் வாலை மீனு
குழம்பு மனக்கும்டா
ஆலந்தலை வாவல் மீனு
அவியல் ருசிக்கும்டா
அமலிபுரம் மட்டு மீனு
ப்ரஸ்சா இருக்கும்டா
பட்டணத்து வெலை மீன
விரும்பி தின்னுடா
சிங்கித்துரை கனவா மீன
அவிச்சு தின்னுடா
இந்த எல்லா மீனும் கிடைக்கும்
நம்ம முத்துநகருடா
மீனை வேட்டையாடி
பிடித்துவரும் கடலோடிடா
பூர்வகுடிடா நாங்க பூர்வகுடிடா.
2
கடற்கரையில மீனை பொறக்கும் கச்சாபூரி திமிரபாரு
கடவோட்டிலும் கடயிறங்கும் கடப்புறத்தான் ஸ்டைல்லப் பாரு
அச்சமின்றி வருவான் இவன்
மச்சம் அள்ளி தருவான்
கையில் ஏதும் மிச்சமின்றி
பணத்தை வாரி கொடுப்பான்டா
கூடுதாழை சூரை மீனு
கூட்டப்பனை ஊளி மீனு
உவரியூரு பன்னா மீனு
இடிந்தகரை குதிப்பு மீனு
கூத்தான்குழி அயலை மீனு
கூட்டப்புளி நெடுவா மீனு
பெருமனல் பெரிய மீனு
இது கன்னியாகுமரி லாஞ்சு மீனுடா
கூடுதாழை சூரை மீன
சுக்கா வைங்கடா
கூட்டப்பனை ஊளி மீன
வருத்து எடுங்கடா
உவரியூரு பன்னா மீனு பளபளக்கும்டா
இடிந்தகரை குதிப்பு மீன
கட்லட் வைங்கடா
கூத்தான்குழி அயலை மீனு
அதிக ரேட்டுடா
கூட்டப்புளி நெடுவா மீனு
அல்வா துண்டுடா
எல்லா மீனும் கிடைக்கும்
நம்ம கன்னியாகுமரிடா
நாங்க பிடிக்காத மீன் இல்லை
தாயின் மடியில
கடல் தாயின் மடியில
சாவை பார்த்து பயமில்லை
இந்த நிலத்துல..
#fisherman
#meenavarsong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: