இராஜராஜ சோழன் சமாதி | Raja Raja Chola's Tomb
Автор: Naam Tv 365
Загружено: 2025-06-24
Просмотров: 25914
Описание:
Naam Tv 365 - பல நாடுகளை ஆட்சி செய்த, மாமன்னன் இராஜராஜ சோழன் சமாதி, உடையாளூரில் உள்ளது. அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதிலிருந்து சுமார் 80 அடி தொலைவில், இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. இங்குதான் ராஜராஜ சோழனின் சமாதி உள்ளது. இதை ,அகழ்வாராய்ச்சி செய்து அந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், இந்தியப் பெருங்கடல் ,அல்லது வங்காள விரிகுடாவில், தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, சிலை அமைக்க வேண்டும் என, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழ் அறிஞர்களாக குடவாயில் பாலசுப்பிரமணியன், நாகசுந்தரம் ஆகியோரை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டனர். அவர்கள் ஆய்வு செய்த பின்னர், சோழர்கள் வாழ்ந்தற்கான செப்பேடுகள், ராஜராஜ சோழன் சமாதி இங்கு இருக்கிறது என்பதற்கு, கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டும் உள்ளது, எனக் கூறினர். ஆனால், தமிழக அரசு சார்பில் சமாதி இங்கு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டனர்.
அதன் பிறகே, அதி நவீன கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி தொல்லியல்துறையினர் இன்றும் நாளையும் ஆய்வு செய்கின்றனர். ராஜராஜ சோழன் சமாதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலம் சோழர்களின் பெருமை, பாரம்பர்யம், வரலாறு ஆகியவை வெளியே வரும். சிற்றரசை ஆண்ட சத்ரபதி சிவாஜிக்கு சிலை, சமகாலத்தில் வாழ்ந்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு சிலை அமைத்ததுபோல் பல நாடுகளை ஆட்சி செய்த ராஜராஜ சோழனுக்கும் சிலை அமைக்க வேண்டும் என்றார். ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் அலுவலர்கள் எங்கள் ஆய்வறிக்கையை முடித்த பின்னர், தமிழக தொல்லியல் துறை ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்'' எனத் தெரிவித்தனர்.
Emperor Raja Raja Cholan Tomb : RAJA RAJA CHOLA MEMORIAL PLACE
The tomb of the great king Rajaraja Chola, who ruled many countries, is located in Odiyalur. There is a Shiva Lingam at that place. About 80 feet away from it, there are two Shiva Lingams.
#naamtv365 #rajarajacholan #rajarajacholasamathi #news #udaiyalur #kumbakonam #cholas #Rajarajacholadeathplace #thanjaiperiyakovil #rajarajachola #rajarajacholanmemorial #rajarajacholannaan #kangaikondacholapuram #thanjavurtemple #brihadeeswaratemple #thanjaishivatemple #viralvideo #viralshort #tamilviralshort #tamilviralvideo #ponniyinselvan #rajarajacholanhistory #choladynasty #cholakingdom #cholawarriors #cholaempire #choladesam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: