பண வர பல மடங்கு அதிகரிக்க அரச இலை பரிகாரம் @selviyinselvan
Автор: Selviyin Selvan
Загружено: 2023-11-08
Просмотров: 44
Описание:
பண வர பல மடங்கு அதிகரிக்க அரச இலை பரிகாரம்
நம் வீடுகளில் கொண்டாடப்படும் ஒவ்வொரு விஷேசத்திற்கு பின்னாலும் அனைவரின் மகிழ்ச்சியும் அந்த மகிழ்ச்சிக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய பொருளாதாரமும் மேம்பட வேண்டும் என்பது தான். அந்த வகையில் தீபாவளி திருநாளின் போதும் புது ஆடைகள் இனிப்பு பட்டாசு என அனைவரும் சந்தோஷமாக கொண்டாடுவார்கள். இத்தகைய சந்தோசம் எல்லாம் நமக்கு நிரந்தரமாக கிடைக்க வேண்டுமெனில் அந்த வீட்டில் பண வரவு நன்றாக இருக்க வேண்டும் இது மிக மிக முக்கியம். ஆகையால் தான் தீபாவளி திருநாள் அன்று குபேரர் பூஜை மகாலட்சுமி பூஜை போன்றவை எல்லாம் நாம் செய்து வருகிறோம் அந்த வகையில் தீபாவளி அன்று இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருக்கும் போது வருடம் முழுவதும் பணவரவு தடை இல்லாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அற்புதமான பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பண வரவிற்கு அரச நிலை பரிகாரம் இந்த பரிகாரத்தை தீபாவளி அன்று இரவு 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளான நேரத்தில் செய்ய வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்திற்கு மஞ்சள் நிற பட்டு துணி 5 அரச இலை தேவை. இந்த அரச இலையை நீங்கள் சனிக்கிழமையை எடுத்து வைப்பதாக இருந்தால் மரத்திலிருந்து பறித்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை தான் எடுக்க போகிறீர்கள் என்றால் மரத்திலிருந்து பறிக்காமல் கீழே இருக்கும் இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த இலை மக்கி ஓட்டைகள் இல்லாத நல்ல இலையாக இருக்க வேண்டும். அதே போல இந்த பூஜையை நீங்கள் இரவு செய்ய முடிவு செய்து விட்டால் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவம் செய்வதை தவிர்த்து விட வேண்டும். அசைவம் செய்து விட்டு இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது. அது மட்டுமின்றி நீங்கள் பகலில் குளித்தாலும் இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பாக கட்டாயம் குளிக்க வேண்டும்.
இப்போது பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மஞ்சள் நிற துணியை மட்டும் நீங்கள் சனிக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று இதை லேசாக அலசி வீட்டு நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல சுத்தமான சந்தனத்தை பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். இந்த சந்தனத்தை வைத்து அரச இலையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு தட்டு எடுத்து அதன் மேல் மஞ்சள் நிற துணியை வைத்து இந்த இலைகளை அப்படியே காய வைக்க வேண்டும். இவை அனைத்தையும் பூஜை அறையில் வைத்து தான் செய்ய வேண்டும். குறிப்பாக நீங்கள் அரச இலையில் ஸ்வஸ்திக் சின்னம் வரும் வரைவது இரவு 11 லிருந்து 12 மணி இந்த நேரத்தில் தான் வரைய வேண்டும். இது மிக மிக முக்கியம்.
இப்போது பூஜை அறையில் இந்த தட்டை வைத்து விட்டு நீங்கள் மகாலட்சுமி தாயாரை எப்படி வணங்குவீர்களோ அதே போல தீப தூப ஆராதனை செய்து பூஜைகளை முடித்த பிறகு இந்த இலையை அன்று இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் திங்கட்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு இந்த அரச இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி பீரோவில் வைத்து விடுங்கள். இந்த மூட்டை அடுத்த வருடம் வரை உங்கள் பீரோவில் இருக்க வேண்டும். அடுத்து வருடம் இதே போல பூஜை செய்வதற்கு முன்பு இதை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடும் நீரிலோ விட்டு விட வேண்டும். இந்த மாதிரி பூஜை செய்த அரச இலை ஸ்வதிக் சின்னத்துடன் உங்கள் பீரோவில் இருக்கும் போது வீட்டில் பண வரவிற்கு தடை என்ற வார்த்தையை இருக்காது.
சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை எளிமையாக இப்படி செய்து வருடம் முழுவதும் நல்ல செல்வ செழிப்புடன் வாழ மகாலட்சுமி தாயாரின் அருளாசியை பெறலாம். இந்தப் பதிவில் உள்ள பரிகார முறையில் உங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் இதை செய்து பலனடையலாம் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
#trending #youtubeshorts #trichy #selviyinselvan #shortstamil #vlogger @selviyinselvan #selviyinselvan #trichy
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: