தையிட்டி சட்டத்தின் ஆட்சியா? ஆக்கிரமிப்பின் சாட்சியா? - உண்மை என்ன? | Facts & Focus |
Автор: Uriyadi | உறியடி
Загружено: 2026-01-01
Просмотров: 794
Описание:
அந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் உட்செல்ல முடியாது வெளியில் போராடிக் கொண்டிருக்க, சட்டபூர்வக் கடமையினை ஆற்ற முடியாமல் வலி.வடக்கு பிரதேச சபையினர் தடுக்கப்பட்டிருக்க, சிங்கள சமூகத்தினரின் வாகனங்கள் மட்டும் வழமைபோல் அன்றைய தினமும் (21.12.2025) அனுமதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கைதுகளும் போராட்டங்களும் பதற்றமான சூழலை அவ்விடத்தில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தையிட்டி விவகாரத்தில் முன்னுக்குப் பின் வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தையிட்டி சட்டத்தின் ஆட்சியா? ஆக்கிரமிப்பின் சாட்சியா?. உண்மையில் அங்கு நடைபெறுவது என்ன? என்பதை இந்தக் காணொளி வெளிப்படுத்துகின்றது.
“மக்களின் நிலங்களை மக்களிற்கே வழங்குவோம்” என்றும் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி வழங்கிய என்.பி.பி அரசாங்கத்தின் இரட்டை முகம் தையிட்டி விவகாரத்தில் வெளிப்படுகின்றது. வழங்கிய வாக்குறுதிகளிற்கு நேர்மாறாக சட்டவிரோத, ஆக்கிரமிப்பினை சட்டபூர்வமாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமையினை சமீபகால நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன.
#Thaiyadi #ThaiyadiIssue #LandOccupation #IllegalOccupation #LandGrab #RuleOfLaw #JusticeDenied #Accountability #JusticeForTamils #SriLanka #eelam #NPP #anura #akd #srilankanpolitics
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: