இதயம் தொடும் இனிய பாடல்
Автор: Dot New@Sivayogi
Загружено: 2024-01-11
Просмотров: 1162
Описание:
சிறைவாசியா இல்லை சுகவாசியா
நடுக்கடலில் இந்த கடிதாசியா
அலையற்ற கடலில்
ஆள் அற்ற நிலையில்
நான் தனி அறையில்
வேண்டியபடி மனதில் ...........சிறைவாசியா இல்லை சுகவாசியா
பிழையற்ற என்னை
குறை என்று கூறி
சிறை வைத்து என்னை
அழச் செய்த பின்பு.......... சிறைவாசியா இல்லை சுகவாசியா
விசாரணை இன்றி
விருப்பம் போல் எழுதி
கையெழுத்தைப் பெற்று
கைதியாக்கிய பின்பு..........சிறைவாசியா இல்லை சுகவாசியா
இருக்கின்ற பொருள் கண்டு
எடுக்கின்ற பொருள் கொண்டு
மனம் படைப்பது தான்
நரக சொர்க்கம் என்றால்..........சிறைவாசியா இல்லை சுகவாசியா
பார்க்கின்ற நான் வேறு
பார்த்திட்ட பொருள் வேறு
நேரிடும் செயல் கண்டு
தெளிந்திட்ட மனம் கொண்டால்.........சிறைவாசியா இல்லை சுகவாசியா
உறவுகள் பிரிந்து
திசைகளை மறந்து
கரையேற நினைத்து
காலத்தை கடந்தால்............சிறைவாசியா இல்லை சுகவாசியா
எனக்காக எழுதி
நான் பாடிக் கொள்வேன்
என்னை நான் தேற்றி கரையேறி மகிழ்வேன்.
சிறைவாசியா இல்லை சுகவாசியா
#sivayogi
www.yogakudil.org // +91 7598418395
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: