குற்றாலக் குறவஞ்சிக் கதை | Kutrala Kuravanji | Singan & Singi Jeya & Maran
Автор: Jeya Maran
Загружено: 2021-01-23
Просмотров: 21610
Описание:
குற்றாலக் குறவஞ்சிக் கதை | Kutrala Kuravanji | Singan & Singi | Jeya & Maran
சிங்கனும் சிங்கியும் உரையாடும் குற்றாலக் குறவஞ்சிக் காட்சி!!
இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி?
கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா!
பார்க்கில் அதிசயந் தோணுது சொல்லப்
பயமா இருக்குதடி சிங்கி!
ஆர்க்கும் பயமில்லை தோனின காரியம்
அஞ்சாமற் சொல்லடா சிங்கா!
காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி?
சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா!
சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே
திருகு முறுகென்னடி சிங்கி!
கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த வரிசையடா சிங்கா!
நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல
நெளிந்த நெளிவென்னடி சிங்கி?
பாண்டிய னார்மகள் வேண்டும் குறிக்காகப்
பாடக மிட்டதடா சிங்கா!
மாண்ட தவளையுன் காலிலே கட்டிய
மார்க்கம தேதுபெண்ணே சிங்கி!
ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப் பெண்கள்
அணிமணிக் கெச்சமடா சிங்கா
சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி
சுருண்டு கிடப்பானேன் சிங்கி?
கண்டிய தேசத்திற் பாண்டுநான் பெற்ற
காலாழி பீலியடா சிங்கா!
மெல்லிய பூந்தொடை வாழைக் குருத்தை
விரித்து மடித்ததார் சிங்கி?
நெல்வேலி யார்தந்த சல்லடைச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா!
ஊருக்கு மேற்கே உயர்ந்த அரசிலே
சாரைப்பாம் பேது பெண்ணே சிங்கி?
சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த
செம்பொன் அரைஞாண்டா சிங்கா!
மார்பிற்கு மேலேபுடைத்த சிலந்தியில்
கொப்புளம் கொள்வானேன் சிங்கி?
பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த
பாரமுத் தாரமடா சிங்கா!
எட்டுப் பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி!
குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா!
வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பானேன் சிங்கி!
காதில் வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா!
கள்ளிப்பூப் பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி!
தெற்கு வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா!
வன்னக் குமிழிலே புள்னை அரும்பேது சிங்கி
மண்ணில் முந்நீர்ச் சலாபத்து முத்துமூக்குத்திகாண் சிங்கா!
சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி!
தென்குருகையூரார்தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா!
பொன்னிட்ட மேலெல்லாம் மின்வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி
இந்த வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா! -
இந்தப் பணியைநீ பூணப் பொறுக்குமோ சிங்கி!
பூவில் ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக் குங்காண் சிங்கா!
Other ways to follow me:
Google Podcast: https://tinyurl.com/jeyagooglepodcast
Apple Podcast: https://tinyurl.com/jeyaapplepodcast
Blog: https://jeyamaran.wixsite.com/sangemu...
Facebook Page: / jeya.maran.5
பிரதிலிபி எழுத்துப் பக்கம் : https://tamil.pratilipi.com/user/jeya...
#இத்தனைநாளாக
#kutralakuravanji
#courtalakuravanji
#kuravanji
#குற்றாலக்குறவஞ்சி
#குறவஞ்சி
#tamilliterature
#tamil
#kurathi
#vasanthavalli
#jeyamaran
#literaturestories
#tamilstories
#tamillitstories
#tamilliteraturestories
#mozhisollumvazhi
#kumanan
#sangailakkiyam
#sangamera
#sangapadal
#tamilliterature
#tamizhliterature
#tamizh
#thamizhliterature
#thamizh
#thamilliterature
#thamil
#tamil
#jeyamaran
#literaturestories
#tamilstories
#tamillitstories
#tamilliteraturestories
#mozhisollumvazhi
#tamilpoems
#tamilkavithai
#tamilkavithaigal
#thamilkavithai
#thamilkavithaigal
#thamilpoems
#tamizhkavithai
#tamizhkavithaigal
#tamizhpoems
#thamizhkavithai
#thamizhkavithaigal
#thamizhpoems
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: