சிரிப்பு யோகா மாஸ்டர் நிபுணர் திரு.கிரிதரன் அவர்கள்,
Автор: Sky Media
Загружено: 2025-11-15
Просмотров: 77
Описание: 31.10.2025 வெள்ளிக்கிழமையன்று, வனாலயத்தில் நடைபெற்ற வான்மழை-91 ஆம் கருத்தரங்கில், வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் தவம் இயற்றினார். ஆன்மீகம் மற்றும் இலக்கியத்துறை இயக்குநர், ஞானபாரதி திரு.வெ.அனந்தகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைவர், சுவாதி திரு.K.சின்னசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். சிவகாசி - தாய்வழி இயற்கை உணவகம், நிறுவனர் திரு.மாறன் G அவர்கள், இயற்கை வழி உணவு குறித்து தலைமையுரையாற்றினார். சிரிப்பு யோகா மாஸ்டர் மற்றும் மழைநீர் சேமிப்பு நிபுணர் திரு.கிரிதரன் அவர்கள், மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றி, சிரிப்பு யோகா கலையின் மூலம் கூட்டத்தினர் அனைவரையும் புத்துணர்வு பெற செய்தார். இயற்கை விவசாயி, படியூரை சேர்ந்த திரு.சி.சுப்பிரமணியன் அவர்களுக்கு வனம் அமைப்பின் ‘நம்மாழ்வார் விருது’ வழங்கி, ராம்ராஜ் காட்டன் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் பரிசு கூப்பன்கள் மற்றும் மீன் அமிலம் இயற்கை உரம் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, பல்லடம் ராம் நெய் நிறுவனம் மற்றும் தங்கலட்சுமி ஜுவல்லரி சார்பில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. வனம் பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இணைசெயலாளர் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வனம் நிர்வாகிகள், அறங்காவலர்கள், இயக்குநர்கள், தன்னார்வலர்கள், விவசாய பெருமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: