ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

ஐங்கரனை ஒத்த மனம் - கொங்கணகிரி | Aingranai - Konganagiri | Thiruppugazh | Amutham Music

Автор: Amutham Music

Загружено: 2020-06-15

Просмотров: 140224

Описание: Aingranai Otha Manam- Konganagiri | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Lyrics : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music

ஐங்கரனை ஒத்த மனம் - கொங்கணகிரி | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம கற்றிவளர்
அந்திபக லற்றநினை வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தி உன்னை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனே அருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்
உன்றனைநி னைத்தமைய அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.

அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

Song Download & Streaming
Apple Music :   / thirupugazh-panchabootha-sthala  
Amazon Music : https://music.amazon.in/albums/B005G6...
Youtube Music :    • Thirupugazh  
Spotify : https://open.spotify.com/album/5r2stC...
Napster : https://us.napster.com/artist/sudha-r...
Jio Saavan : : https://www.jiosaavn.com/album/thirup...
Wynk : https://wynk.in/music/album/thirupuga...

For More Videos:    / @amuthammusicsanskritseries  
Facebook :   / amuthammusicofficial  
For More Videos :    / amuthammusicvideos  
:    / amuthammusic  
:   / amuthammusicsanskritseries  
Facebook :   / amuthammusicofficial  
#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
ஐங்கரனை ஒத்த மனம் - கொங்கணகிரி | Aingranai - Konganagiri | Thiruppugazh | Amutham Music

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

THIRUPPUGAZH | Aingaranai | Hamir Kalyani | Kanda Nadai

THIRUPPUGAZH | Aingaranai | Hamir Kalyani | Kanda Nadai

திரு ஏழு கூற்றிருக்கை - திருப்புகழ் | Thiru Ezhu Kootrirukkai - Thiruppugazh | Nithyashree Mahadevan

திரு ஏழு கூற்றிருக்கை - திருப்புகழ் | Thiru Ezhu Kootrirukkai - Thiruppugazh | Nithyashree Mahadevan

Джем – ஐங்கரனை ஒத்த மனம் - கொங்கணகிரி | Aingranai - Konganagiri | Thiruppugazh | Amutham Music

Джем – ஐங்கரனை ஒத்த மனம் - கொங்கணகிரி | Aingranai - Konganagiri | Thiruppugazh | Amutham Music

Aingaranai Otha Manam

Aingaranai Otha Manam

சிவனார் மனம் குளிர | Sivanar Manam Kulira | Sakthi Vel | Amutham Music

சிவனார் மனம் குளிர | Sivanar Manam Kulira | Sakthi Vel | Amutham Music

தெய்வம் தந்த திருப்புகழ்

தெய்வம் தந்த திருப்புகழ்

இருமலு ரோக முயலகன் - திருத்தணி | Irumalu Roga - Thiruthani | Thiruppugazh | Amutham Music

இருமலு ரோக முயலகன் - திருத்தணி | Irumalu Roga - Thiruthani | Thiruppugazh | Amutham Music

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

SaravanaBhavaNidhi Thiruppugazh

SaravanaBhavaNidhi Thiruppugazh

AINGARANAI OTHA MANA    ஐங்கரனை ஒத்த மனம்

AINGARANAI OTHA MANA ஐங்கரனை ஒத்த மனம்

அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

Ainkaranai.... Thiruppugazh  '' A Realm of Pure Bliss''

Ainkaranai.... Thiruppugazh '' A Realm of Pure Bliss''

Kanda Sashti | Tiruppugazh | Tondisariya | Sivasri Skandaprasad

Kanda Sashti | Tiruppugazh | Tondisariya | Sivasri Skandaprasad

ஆறுமுகம் ஆறுமுகம் - பழனி । திருப்புகழ் | Arumugam - Thiruppugazh | Amutham Music

ஆறுமுகம் ஆறுமுகம் - பழனி । திருப்புகழ் | Arumugam - Thiruppugazh | Amutham Music

அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI

அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI

Ennal Pirakavum (Thiruppugazh)

Ennal Pirakavum (Thiruppugazh)

திருப்பாவை  || Thiruppavai ||  மாலோல கண்ணன் & N S ரங்கநாதன் || Maalola Kannan & N S Ranganathan

திருப்பாவை || Thiruppavai || மாலோல கண்ணன் & N S ரங்கநாதன் || Maalola Kannan & N S Ranganathan

#ஐங்கரனை ஒத்த மனம் #Ainkaranai otha manam #Konkanagiri

#ஐங்கரனை ஒத்த மனம் #Ainkaranai otha manam #Konkanagiri

Azhakaana Palani | Chinna Chinna Muruka | Bhajan Connect Kochi | Nandagovindam Bhajans

Azhakaana Palani | Chinna Chinna Muruka | Bhajan Connect Kochi | Nandagovindam Bhajans

Thiruppugazh Manakkavalai Edhum  (pazhani) | திருப்புகழ்  மனக்கவலை ஏதும்  (பழநி)

Thiruppugazh Manakkavalai Edhum (pazhani) | திருப்புகழ் மனக்கவலை ஏதும் (பழநி)

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]