Niththar perumai - 03 - Thirukkural Parimelazhagar Urai
Автор: செவிச்செல்வம்
Загружено: 2020-05-03
Просмотров: 27
Описание:
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) இருமை வகை தெரிந்து = (பிறப்பு வீடு என்னும்) இரண்டனது (துன்ப வின்பக்) கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து;
ஈண்டு அறம் பூண்டார் பெருமை = (அப்பிறப்பு அறுத்தற்கு) இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
உலகு பிறங்கிற்று = உலகின்கண் உயர்ந்தது.
பரிமேலழகர் உரை விளக்கம்:
"தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்" என்புழிப் போல 'இருமை' என்பது, ஈண்டு எண்ணின்கண் நின்றது.
பிரிநிலை ஏகாரம், விகாரத்தால் தொக்கது.
இதனால், திகிரி உருட்டி உலகம் முழுதாண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது.
இவை மூன்று பாட்டானும், நீத்தாரது பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: