Manohari Maayan Sothari
Автор: Salem S Sivakumar
Загружено: 2026-01-08
Просмотров: 125
Описание:
:: மனோஹரி மாயன் சோதரி ::
ராகம் : கௌரி மனோஹரி.
தாளம் : ஆதி.
பல்லவி :
மனோஹரி மாயன் சோதரி என்னை
ஆதரி சிவாம்பிகே ஜய கௌரி . ( மனோஹரி )
அனுபல்லவி :
ஏதும் அறியாமலே நான் செய்த பாவங்களை
நினைந்து வருந்தி சரண் அடைந்தேன் உன் பாதங்களை.
சிட்டை ஸ்வரம் :
ஸாஸநீ ததப மபமப கரி நிஸ
ரீ ............................. ஸரிகம பத நிஸ
ஸாஸநீ ததப மபமப கரிநிஸ
நீஸரீ காம மபபத தநிநிஸ
நீஸரீ ரி ரீ ரி க ரி ம க ரி ஸஸ
ஸாரி நீஸ தாநி பாத மபதநி . ( மனோஹரி )
சரணம் :
அனாதியான சிவன் அருகமர்ந்தே அண்ட
சராசரம் எல்லாம் ஆளும் என் தாயே !
அனாதையாய் என்னை அலைக்கழித் திடலாமோ
அன்னை நீ இருக்கையில் அழ அழ விடலாமோ
சிட்டைப் பல்லவி :
அந்தகன் எனது அகயிருளகற்றிட
வே ......................நிலைதடுமாறிய
அந்தகன் எனது அகயிருளகற்றிட
சிந்தையுள் ஞானச் சுடரொளி ஏற்றிட
வந்து நீயும் என் நெஞ்சினில் வீற்றிட
நானும் உன்னை நாளும் பாடிப் போற்றிட ( மனோஹரி )
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: