Chennai metro phase 2 | Madhavaram depot & Operations control centre | மாதவரம் மெட்ரோ ரயில் பணிமனை🔧🚇
Автор: Eye Thousand
Загружено: 2023-05-21
Просмотров: 10562
Описание:
Chennai metro phase 2 Corridor 3 & 5 Madhavaram depot and Operations control centre
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடம் 3 & 5 மாதவரம் மெட்ரோ பணிமனை மற்றும் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு மையம்
மாதவரம் மெட்ரோ பணிமனையை பற்றிய முந்தைய காணொளிகளுக்கான லிங்க்
• Chennai metro phase 2 | Madavaram metro de...
இந்த மாதவரம் மெட்ரோ பணிமனையானது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடம் 3 & 5-ல் இயக்கப்படும் மெட்ரோ தொடர்வண்டிகளை பராமரிப்பதற்காக குமரப்பா நெடுஞ்சாலைக்கு அருகில் வழித்தடம் 5 நெடுக சுமார் 57.2 ஹெக்டேர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படுகிறது. இதில் 57.2 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடத்தில் 27.8 ஹெக்டேர் பரப்பளவிற்கு பணிமனை வசதிகளும், மீதமுள்ள 29.4 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடம் பிற வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிமனையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை URC construction Pvt Ltd என்ற நிறுவனம் தற்காலிக தொகை & GST-ஐ சேர்த்து ரூ.329.01 கோடி மதிப்பில் எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி இந்த நிறுவனம் பணிமனைக்கான நிர்வாக கட்டிடம் மற்றும் பட்டறை கட்டிடங்கள் அமைப்பது; பட்டறைக்கான மேற்கூரை அமைப்பது; Mechanical, Electrical & Plumbing பணிகளை மேற்கொள்வது, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, வெளிப்புற கழிவுநீர் வடிகால், உள்புற சாலைகள் கட்டிடக்கலை வேலைப்பாடுகள், வழிகாட்டி பலகைகள் மற்றும் எல்லைப்புற சுவர்கள் அமைப்பது என பல்வேறு பணிகளை செய்ய வேண்டும்.
இந்த பணிமனைக்கு அருகில் சென்னை மெட்ரோ முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இயக்கப்படும் மெட்ரோ தொடர்வண்டிகளின் இயக்கங்களை கண்காணித்து கட்டுப்படுத்த செயல்பாடுகள் கட்டுப்பாட்டு மையம் அமைக்க கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மெட்ரோ நிர்வாகம் ரூ.57.2 கோடி மதிப்பில் மதிப்பீடு செய்து இதற்கான ஒப்பந்த காலமாக 810 நாட்கள் விதிக்கப்பட்டுள்ளது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: