அன்பாக வந்து | Anbaga Vandhu | திருப்புகழ் 585 | Thirupugal 585
Автор: KaavadiTV - காவடி டிவி
Загружено: 2024-10-22
Просмотров: 203212
Описание:
அன்பாக வந்து | Anbaga Vandhu | திருப்புகழ் 585 | Thirupugal 585 #kaavaditv #tamil #murugan #thiruchengode #ardhanareshwar #tamilkadavulmurugan #hindudeity #திருப்புகழ் #astrology #tamilkadavulmuruga #hindugod #kavaditv #thiruchendurtemple #thiruppugazh #thirupugazh #thirupugal #thiruchendurmurugan #thiruchendurmurugantemple #thiruthani #thiruthanimurugantemple #palani #palanimurugan #thiruvannamalai #thiruparankundram #thiruparangundram #swamimalai #swaminathan #palamuthircholai
......... பாடல் .........
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற ...... நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் ...... முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து ...... அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை ...... யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ...... வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அன்பாக வந்து உன்தாள் பணிந்து ... அன்புடன் வந்து உன்
பாதங்களைப் பணிந்து,
ஐம்பூதம் ஒன்ற நினையாமல் ... பஞ்ச பூதங்களுடனும்
ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல்,
அன்பால் மிகுந்து ... அன்பு அதிகமாய்ப் போய்,
நஞ்சாரு கண்கள் ... விஷம் நிறைந்த கண்களும்,
அம்போருகங்கள் முலைதானும் ... தாமரை மொட்டுப் போன்ற
மார்பகங்களும்,
கொந்தே மிகுந்து ... பூங்கொத்துக்கள் நிறைந்து
வண்டாடி நின்று கொண்டாடுகின்ற ... வண்டுகள் விளையாடி
மகிழ்கின்ற
குழலாரைக் கொண்டே நினைந்து ... கூந்தலும் உடைய பொது
மகளிரை மனதில் நினைத்தே,
மன்பேது மண்டி ... மிக்க அறியாமை பெருகி
குன்றா மலைந்து அலைவேனோ ... மனம் குன்றி ஒருவழிப்படாது
அலைந்து திரிவேனோ?
மன்றாடி தந்த மைந்தா ... சபையில் நடனமாடும் சிவபிரான் தந்த
குமரனே,
மிகுந்த வம்பார் கடம்பை அணிவோனே ... மிக்க வாசனை
நிறைந்த கடப்பமாலையை அணிபவனே,
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் ... வந்து பணிந்து நின்ற
அடியார்களின் பிறப்புக்களை
வம்பே தொலைந்த வடிவேலா ... அடியோடு தொலைக்கும்
கூரிய வேலை உடையவனே,
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ ... பல இடங்களுக்கும்
சென்று கந்தா என அழைக்கும்போது
செஞ்சேவல் கொண்டு வரவேணும் ... செவ்விய சேவலை ஏந்தி
என்முன் வரவேண்டும்.
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த ... செந்நெல் பயிரும்
தாமரையும் ஒன்றாக வளரும்
செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... திருச்செங்கோட்டில்*
வீற்றிருக்கும் பெருமாளே.
English Lyrics
anbAga vandhu unthAL paNindhu
aimbUtha mondra ...... ninaiyAmal
anbAl migundhu nanjAru kaNgaL
ambOru gangaL ...... mulaithAnum
kondhE migundhu vaNdadi nindru
koNdAdu gindra ...... kuzhalAraik
koNdE ninaindhu manbEdhu maNdi
kundrA malaindhu ...... alaivEnO
mandrAdi thandha maindhA migundha
vambAr kadambai ...... aNivOnE
vandhE paNindhu nindrAr bavangaL
vambE tholaindha ...... vadivElA
sendrE idangaL kandhA enumpo
senchEval koNdu ...... varavENum
senchAli kanja mondrAy vaLarndha
sengkOdamarndha ...... perumALE
• Thiruppugazh | திருப்புகழ் தொகுப்பு | Thi... - திருப்புகழின் தொகுப்பு-சகல பிரச்சனை-மனக்கவலை நீங்கி-சகல சௌபாக்கியங்களை பெற்றுத்தர இடைவிடாமல் கேளுங்க
#kaavaditv #kaavadi #kavaditv #kavadi
Amazon today's Deal - https://amzn.to/4cB9RVp
Please Subscribe, Follow, Comment and the press Bell Button -
YouTube : https://youtube.com/channel/@kaavaditv
Facebook : / kaavaditv
Instagram : / kaavaditv
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: