தொண்டமானாறு–வல்வெட்டித்துறை–துன்னாலை வீதி புனரமைப்பு ஆரம்பம்
Автор: YARL NIRUJAN
Загружено: 2026-01-26
Просмотров: 320
Описание:
🚨போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் தொண்டமானாறு–வல்வெட்டித்துறை–துன்னாலை வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (26) ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,
மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வேலைகள் தொடங்கி இடைநடுவில் கைவிடப்பட்டதுடன் இந்த வீதியால் பயணிப்பவர்கள் மற்றும் செல்வச்சந்நிதி ஆலய திருவிழாக்களுக்கு காவடி எடுக்கும் பக்தர்களும் பெரும் இடர்நெருக்கடிகளை சந்தித்தனர். இந்நிலையில் தற்போது இந்த வீதி புனரமைப்பு பணி தொடங்கப்பட்டமை அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: