தேனி சுவாமிகளுடன் டாக்டர்திரு கைலாசம் அய்யாவின் அனுபவம்/ DR KAILASAM AYYA WITH THENI SWAMIGAL
Автор: THENI SWAMIGAL MEIGNANAVELI
Загружено: 2021-07-05
Просмотров: 3212
Описание:
ஆத்ம ஞானி தேனி சுவாமிகள் - ஓர் அறிமுகம்
உலகத்தில் தர்மத்தை நிலை நாட்டவும், ஆன்மீக மறுமலர்ச்சி உண்டாக்கவும் அவ்வப்போது ஆத்மா ஞானிகள் தோன்றி நாட்டு மக்களை நன்நெறிப்படுத்தி ஆன்மீகத்தில் கிழைக்கச் செய்து பிறவா நிலையாகிய ஆத்ம ஞானத்தை அடைய வழிகாட்டுகிறார்கள்.
அந்த வகையில் பாரத நாட்டில்தான் எண்ணற்ற ஆத்ம ஞானிகளும், ரிஷிகளும், தவ சிரேஷ்டர் களும் தோன்றி நாட்டை ஆன்மீகத்தில் திளைக்கச் செய்துள்ளார்கள்
தமிழகத்தின் வளமான பகுதிகளில் ஒன்றான தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி வட்டம் மரிக்குண்டு மதுரா M . சுப்புலாபுரம் கிராமத்தில் ஸ்ரீ சற்குரு சுவாமிகள் என்ற மகான் ஒருவர் சில காலம் தங்கி நிர்விகள்ப சமாதியில் இருந்துள்ளார்கள்.
ஸ்ரீ சற்குரு சுவாமிகளுக்கு அந்த ஊரில் வாழ்ந்து வந்த கொண்டு சுவாமி நாயக்கர், கிச்சம்மாள் தம்பதியருக்கு ஸ்ரீ சற்குரு சாமிகளின் அருளாசியினால் 28 - 08 - 1931-ல் முன் ஜென்மங்களில் லேயே ஆத்மா சாதனைகளை முடித்த ஒர் ஞானி குழந்தையாக பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு ராஜி என்ற செல்லப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள்.
5 - ம் வகுப்பு வரை படிக்க வைத்தனர்.
அடுத்து தந்தையாருக்கு துணையாக விவசாய பணியில் ஈடுபட்டார்.
ஸ்ரீ சற்குரு சுவாமிகளின் சீடரான குப்பையா சுவாமிகள் என்பவர் ஞான அனுபவம் பெற்றவர் அவ்வூரில் வசித்துவந்தார்.
குப்பையா சுவாமிகளிடம் ராஜிக்கு நெருக்கம் அதிகமாகியது.
அவரிடம் பல ஆன்மீக விஷயங்களை அறிந்து கொண்டார்.
ஒரு நாள் "ஸ்ரீரங்க மகாதமியம்" என்னும் நூலை கொடுத்து படிக்கச் சொன்னார்.
அதில் ஒரு ஸ்லோகம் "எண்ணூறு யுக கோடி ஆண்டுகள் தவம் இருந்தாலும் கண்ணனைக் காண்பது அரிது
அரிதேயாகும்.
உன்நாடி சற்றே நோக்கிடில் கண்ணனை கண்ணில் கண்டு உய்திடல் ஆகும்"
இந்த ஸ்லோகத்தின் உட்பொருள் ராஜி மனதில் ஆழமாக பதிந்தது.
உள்முக நாட்டம் பயில வேண்டுமென்ற தீவிர வேட்கை ராஜிக்கு உண்டாயிற்று.
முன்ஜென்ம பயனால் முழு நாட்டம் பயின்ற சுத்த உணர்வு நிலையை ஆன்ம நிலையை அடைந்தது.
மேலும் தன்னை தேடி வரும் ஆத்ம ஞானதாகம் உள்ள அன்பர்களுக்கு
ஆத்ம அனுபவ ஞானஉபதேசத்தை வழங்கிவந்தரர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் M-சுப்லாபுரதில் 2016 மார்ச் 20 அன்று ஞான சமாதி நிலைப் பெற்றார்.
ஆத்ம ஞான உபதேசம் தொடர்கிறது....
Web id: www.meignanaveli.org
E Mail: [email protected]
Location:
THENI SWAMIGAL IN MEIGNANA VELI, SF NO-106/2, M.SUBBULAPURAM, AUNDIPATTY TK THENI DIST - 625517, Tamilnadu, India.
For Any Contact: Meiganana Veli Sathsngam, C/o Dhanalakshmi-Sivakumar No 15/1/142-C, 2nd Street, Thendral Nagar, Palanichetti Patti, Theni-625531, Tamilnadu, India.
Mob No –
BRABHANJAN – 9751792555
RANGARAJ – 9385472143
Contract: All days
Time:- 07.00 am to 07.00pm
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: