ஓசூர் பகுதிகளில் காலிஃபிளவர் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
Автор: Star News Hosur
Загружено: 2025-02-18
Просмотров: 337
Описание:
காலிஃபிளவர் விளைச்சல் அதி்கரித்து
விலை குறைவு
விலைக்கு வாங்க வியாபாரிகள் இல்லாததால் விவசாயிகள் வேதனை...
ஓசூர் பகுதிகளில் காலிஃபிளவர் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பாகலூர், ஆவலப்பள்ளி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி ராயக்கோட்டை அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலம் காலிஃபிளவர், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளையும் காய்கறிகள் தரமான மற்றும் சுவையாக உள்ளதால், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கட்டிலிருந்து தினசரி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போல் குளிர்ந்த சீதோசன நிலை மற்றத்தால் காலிஃபிளவர் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது,
ஒரு ஏக்கரில் காலிஃபிளவர்பயிரிட சுமார் 20 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படுகிறது. இதற்கான நர்சரிகளில் ஒரு நாற்று ரூ.1 -க்கு வாங்கி வந்து அதனை நடவு செய்து, உரம் மற்றும் வேலையாட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு மொத்தம் ரூ.70,ஆயிரம் செலவாகிறது. காலிஃபிளவர் நாற்று நடவு செய்யப்பட்டு நன்கு பராமரித்து வந்தால் 55 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஏக்கரில் ஒரு மூட்டைக்கு 50 கிலோ என சுமார் 300 மூட்டை வரை அறுவடை செய்யலாம். வழக்கமாக 50 கிலோ ஒரு மூட்டை ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனையாகும். தற்போது, குளிர்ந்த சீதோசன நிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் உள்ளதாலும் அதிகளவில் பயிரிட்டுள்ளதாலும் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கு காலிஃபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஜனவரி மாதத்தில் மூட்டை ஆயிரத்திற்கும், ஒரு பூ ரூ.40 க்கும் விற்பனை செய்த நிலையில், விளைச்சல் அதிகரிப்பால் தற்போது 50 சதவீதம் விலை குறைந்து மூட்டை ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுவதால் அறுவடை கூலி கூட கிடைக்காததால் தோட்டங்களிலியே அப்படியே விட்டுள்ளனர் என கூறினர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: