The Vigil of Pentecost in Tamil - 07.06.2025 @ 7:00PM to 06:30 AM (German Time)
Автор: Tamil Catholic Daily
Загружено: 2025-06-07
Просмотров: 1356
Описание:
நேரலையில் தூயஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா - 2025
ஆண்டவர் யேசு விண்ணகம் செல்வதற்கு முன் தன்னுடைய சீடர்களுக்கு உங்களுக்கு ஒரு துணையாளரை அனுப்புவேன் என்று வாக்களித்தபடி, சீடர்கள் கூடியிருந்து செபித்த போது பெரும் காற்றும் இரைச்சலோடும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்ததை சீடர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.
அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 07-06-2025 (சனிக்கிழமை) அன்று முழு இரவு நேரலை ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா இரவு 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. அதிகாலை 05:30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமைக்குரிய திருப்பலியும் நேரலையில் இடம்பெறும்
நேரலையில் நமது பணியகத்தின், YouTube இல் இவ்வழிபாடு ஒளிபரப்பாகும். உங்கள் வீடுகளில் இருந்தபடியே இந்த முழுஇரவு ஆராதனை வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரையும், தூய ஆவியின் அபிசேகத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுகின்றோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: