பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை!
Автор: Trichyzone Media
Загружено: 2026-01-25
Просмотров: 2640
Описание:
நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மோகன்ராஜ், கலைவாணி, பாஸ்கர் ஆகியோர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்,..
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழ் தகுதி தேர்வு, நியமனத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 37,000 பேர் உள்ளனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக 2023 - 24 ஆம் கல்வியாண்டில் நியமனத் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 2800 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 726 வட்டார வளமைய பயிற்றுனர் பணியிடங்களை நிரப்ப வில்லை. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் 2026 ஜனவரி மாதத்திற்குள் 19,260 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் நியமன தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கல்வி தரம் பாதிக்கப்படும். விரைவில் தேர்தல் அறிவிப்பு வர இருப்பதால் அதற்கு முன்பாக மறு நியமனத் தேர்வு நடத்தாமல் தகுதியான பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை பிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். எங்களின் ஒட்டுமொத்த கனவு இதுதான் என தெரிவித்தனர்.
#trichyupdates #trichyzonemedia #graduateteacher #demands
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: