புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சேர்மன் RLV
Автор: MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
Загружено: 2025-11-03
Просмотров: 198
Описание:
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சேர்மன் ஆர் எல் வெங்கட்ராமன் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய கட்சியையும் , கொடியையும் அறிவிப்பு செய்து செய்தியாளர் சந்திப்பு : -
புதுச்சேரி அரசியலில் தற்போது ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்று 71 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த நேரத்தில் கூட புதுவையில் இதுவரை ஆட்சி செய்த கொள்ளையர்களிடம் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுவரை புதுவையில் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க தவறி விட்டது. நானும் எனது 49 வருட அரசியல் வாழ்க்கையில் 7 முதலமைச்சர்களுடன் பயணம் செய்துள்ளேன். யாரும் மக்களுக்கான ஆட்சியை செய்யவில்லை. மக்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வரமுடியவில்லை. இதற்கு காரணம் ஒட்டு என்கிற மக்களின் உரிமையை , பணம் மற்றும் பரிசு பொருள்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதனால் தான் மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க முடியவில்லை. இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. இதனை மாற்றி அமைப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். ஊழலற்ற நேர்மையான ஜனநாயக ரீதியான மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க எனது தலைமையில் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய அரசியல் கட்சியை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உள்ள பிஜேபி என் ஆர் இரட்டை என்ஜின் ஆட்சியில் கூட அனைத்து துறைகளிலும் வரலாறு காணாத லஞ்ச ஊழல் மலிந்து சந்தி சிரிக்கிறது. கஞ்சா, கொலை, கொள்ளை , விபச்சாரம் , கட்ட பஞ்சாயத்து போன்றவை கட்டுக்கடங்காமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
மதுபான தொழிற்சாலைகள் மக்கள் வாழ்வாதாரமாக விளங்கும் நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுபான தொழிற்சாலைகள் விஷயத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் மூலம் நிதி ஆதாரம் பெருகும் என்ற போர்வையில் ரெஸ்டோ பார்களின் தாக்கம் பள்ளி கல்லூரி பிள்ளைகளையும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக கெடுத்துள்ளது.
இந்த ரெட்டை என்ஜின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட குப்பை வரி இன்னும் நடைமுறை படுத்தப்படவில்லை. மாறாக மின் துறையை தனியார் மையம் ஆக்க புதுவை அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது. மின் கட்டணம் உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, பிரி பெய்டு மீட்டர் பொருத்துவது போன்ற செயல்கள் மக்களை வஞ்சிப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் மின்துறை தனியார் மயமாக்குதல் பற்றி மக்களுக்கு தவறான செய்திகளை கொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மாட்டுத்தீவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தீவனத்திற்கு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
மக்களுக்கு அடிப்படை மற்றும் அத்தியாவசியமான ரோடு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை இந்த அரசால் செய்து தரப்படவில்லை.
ஸ்மார்ட் சிட்டி மூலம் உள் கட்டமைப்பு என்ற பெயரில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளது. இதை கேட்க புதுவையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தயாராக இல்லை.
ஒட்டு மொத்தத்தில் இந்த ஆட்சியில் மக்களுக்காக அறிவிக்கப்பட்ட எந்த திட்டங்களும் நிறைவேற்ற படவில்லை.
அமைச்சர் ஜான்குமாருக்கு 100 நாட்களுக்கு மேல் கடந்தும் இலாகா ஒதுக்காதது ஏன். இந்த ஆட்சி ஈகோவில் நடப்பது வெளிச்சமாகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ்கள் தரம் குறைந்து , அதிகாரிகளால் முறையான ஆய்வு செய்து சான்று அளிக்காமல் பள்ளி கல்லூரிகளுக்கு சாதகமாக சான்று அளிக்கின்ற காரணத்தினால் விபத்து ஏற்பட்டு மாணவர்களை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதல் அமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் புதுவை அரசை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
மேலும் மக்கள் பிரச்சனைகளில் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய *கவர்னர்*நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்*.
அன்புடன்
RL வெங்கட்ராமன் தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: